முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. சென்செக்ஸ் 53,200க்கு மேல் வர்த்தகம்.. நிஃப்டி 15,950 அருகில்..!

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த வாரத்திலேயே ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், இரண்டாவது நாளாக இன்று இந்திய சந்தைகள் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து உருமாறிய கொரோனா தாக்கமானது, சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் அன்னிய முதலீடுகளும் குறைந்து வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை நோக்கி முதலீட்டாளrகளை நகர்த்துகிறது. இதனால் பங்கு சந்தையில் பெரியளவிலான முதலீடுகள் செய்யப்படவில்லை.

ஏற்றத்தில் சந்தைகள்

ஏற்றத்தில் சந்தைகள்

கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வரும் நிலையில் பொருளாதாரம் பற்றிய கவலையின் மத்தியில், இன்னும் நிதி ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகிறது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 117.96 புள்ளிகள் அதிகரித்து, 53,068.59 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 84.50 புள்ளிகள் அதிகரித்து, 15,969.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 211.61 புள்ளிகள் அதிகரித்து, 53,162.24 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 50 புள்ளிகள் அதிகரித்து, 15,935.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டைட்டன் நிறுவனம், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், கிரசிம், ஓ.என்.ஜி.சி, யுபிஎல், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டைட்டன் நிறுவனம், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, ஹெச்.டி.எஃப்.சி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கிரசிம், ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், யுபிஎல், ஓ.என்.ஜி.சி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 280.11 புள்ளிகள் அதிகரித்து, 53,230.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 70.90 புள்ளிகள் அதிகரித்து, 15,956.05 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+