முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. வரலாற்று உச்சத்தில் சந்தைகள்.. சென்செக்ஸ் 54,300 மேல் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், ஆசிய சந்தைகளும் ஏற்றத்தில் தொடங்கியுள்ளன. இதற்கிடையில் இந்திய சந்தைகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. அதுவும் வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.

ஒரு புறம் உருமாற்றம் அடைந்த கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் குறித்தான சாதகமான காரணிகளும் வந்து கொண்டுள்ளன. தேவையும் மீண்டு வந்து கொண்டுள்ளது. இதனால் உற்பத்தி விகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம்

முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம்

கடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட கொரோனாவினால் சரிவினைக் கண்டுள்ள பொருளாதாரம் தற்போது மீண்டும் வர ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் பற்பல நிறுவனங்களும் சந்தைக்கு சாதகமான காலாண்டு அறிவிப்புகளை கொடுத்து வருகின்றன. இது சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பல நிறுவனங்களும் தங்களது பொது பங்கு வெளியீட்டினையும் செய்து வருகின்றன. இதுவும் சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 173.45 புள்ளிகள் அதிகரித்து, 53,996.81 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 22.70 புள்ளிகள் அதிகரித்து, 16,153.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 247.86 புள்ளிகள் அதிகரித்து, 54,071.22 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 64.50 புள்ளிகள் அதிகரித்து, 16,195 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் குறியீடுகள்

இன்டெக்ஸ் குறியீடுகள்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் கூட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி குறியீடுகள் சற்று சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டாடா ஸ்டீல், ஸ்ரீ சிமெண்ட்ஸ், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ், பார்தி ஏர்டெல், ஓ.என்.ஜி.சி, சன் பார்மா, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டாடா ஸ்டீல், கோடக் மகேந்திரா, இந்தலிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பார்தி ஏர்டெல், சன் பார்மா, நெஸ்டில், டெக் மகேந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 13 பைசா அதிகரித்து, 74.15 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.28 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
தற்போது சென்செக்ஸ் 489.74 புள்ளிகள் அதிகரித்து, 54,313 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 128.95 புள்ளிகள் அதிகரித்து, 16,259.70 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+