நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும், இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே புதிய உச்சத்தினை தொட்டு வரும் சந்தையானது, இன்றும் ஏற்றத்தில் காணப்படுகிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று வலுவிழந்து இருந்தாலும், பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது சந்தைக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது.
இதற்கிடையில் ஆசிய சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இந்த நிலையில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
சந்தையில் தாக்கம்
அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து உருமாறிய கொரோனா தாக்கமானது, சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. குறிப்பாக இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
அதோடு சந்தையானது தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், புராபிட் புக்கிங் செய்தாலும் சற்று சரிவினைக் காணலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
இதற்கிடையில் இன்று தொடக்கத்தில் சென்செக்ஸ் 58.46 புள்ளிகள் அதிகரித்து, 54,461.31 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 16.55 புள்ளிகள் அதிகரித்து, 16,274.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள கோடக் மகேந்திரா, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.டி.எஃப்.சி லைஃப், டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஸ்ரீ சிமெண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப், கிரசிம், ஹீரோ மோட்டோகார்ப், சிப்லா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள கோடக் மகேந்திரா, ஹெச்.டி.எஃப்.சி, டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், நெஸ்டில், ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று சரிவினைக் கண்டு 74.42 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
தற்போது சென்செக்ஸ் 248.02 புள்ளிகள் அதிகரித்து, 54,650.87 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 58.40 புள்ளிகள் அதிகரித்து, 16,316.65 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications