நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்றும், பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
கடந்த சில அமர்வில காலை அமர்வில் சரிவினைக் கண்டு இருந்த நிலையில், மாலையில் மீண்டும் சற்று ஏற்றத்தினைக் கண்டது. எனினும் சென்செக்ஸ் சற்று சரிவிலும், நிஃப்டி சற்று சரிவிலும் முடிவடைந்தது.
இதற்கிடையில் கடந்த அமர்வில் அமெரிக்காவின் சந்தை குறியீடுகள் வரலாற்று உச்சத்தினை தொட்டு முடிவடைந்தன. இது மாபெரும் உள்கட்டமைப்பு ஊக்கத்தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்ற இறக்கம் இருக்கலாம்
எனினும் ஆசியாவின் பல நாடுகளில் உருமாற்றம் அடைந்துள்ள புதிய வகை கொரோனாவின் தாக்கம், இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆசிய சந்தைகள் பலவும் சற்று சரிவில் தான் காணப்பட்டன. இதனால் சந்தையில் இன்றும் ஏற்ற இறக்கம் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. சென்செக்ஸ் 176.28 புள்ளிகள் அதிகரித்து, 54,702.21 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 30.80 புள்ளிகள் அதிகரித்து, 16,251.20.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 149.92 புள்ளிகள் அதிகரித்து, 54,675.85 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 41.20 புள்ளிகள் அதிகரித்து, 16,323.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,443 பங்குகள் ஏற்றத்திலும், 541 பங்குகள் சரிவிலும், 77 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடு 1% மேலாகவும், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% கீழாகவும் ஏற்றம் கண்டுள்ளன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா, எம்&எம், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சன் பார்மா, ஈச்சர் மோட்டார்ஸ், இந்தஸிந்த் வங்கி, டாடா ஸ்டீல், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், டெக் மகேந்திரா, ஹெச்.சி.எல். டெக், எம்&எம், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சன் பார்மா, டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி, இந்தஸிந்த் வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 150.12 புள்ளிகள் அதிகரித்து, 54,676.05 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 41.30 புள்ளிகள் அதிகரித்து, 16,323.55 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
இதற்கிடையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது சற்று அதிகரித்து, 74.28 ரூபாயாக தொடங்கியுள்ளது.
கொரோனா மூன்றாம் அலையின் அச்சத்திந் மத்தியில், சந்தையில் ஏற்றம் இறக்கம் அதிகம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications