55,000 புள்ளிகளுக்கு மேலாக வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. வரலாற்று உச்சத்தில் நிஃப்டி.. நல்ல லாபம் தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் மீண்டும் புதிய உச்சத்தில் காணப்படுகின்றன.

இது அமெரிக்க சந்தைகள் வரலாற்று உச்சத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன. இதனை தொடேர்ந்து இந்திய சந்தைகளும் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றன.

தமிழ்நாடு பட்ஜெட் 2021ல் என்ன ஸ்பெஷல்..!! தமிழ்நாடு பட்ஜெட் 2021ல் என்ன ஸ்பெஷல்..!!

அமெரிக்காவின் வேலையின்மை நலன் குறித்த டேட்டாவானது, மீண்டும் மூன்றாவது வாரமாக குறைந்துள்ளது. இது சந்தையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதையே சுட்டிக் காட்டுகின்றது. வேலை வாய்ப்புகள் பெரும் நிலையில், இது பொருளாதாரமும் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே காட்டுகின்றது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 164.17 புள்ளிகள் அதிகரித்து, 55,008.15 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 18.50 புள்ளிகள் அதிகரித்து, 16,382.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 200.27 புள்ளிகள் அதிகரித்து, 55,044.25 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி, 57.10 புள்ளிகள் அதிகரித்து, 16,421.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1480 பங்குகள் ஏற்றத்திலும், இதே 677 பங்குகள் சரிவிலும், 79 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் குறியீடுகள்

இன்டெக்ஸ் குறியீடுகள்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் பெரியளவில் ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடு மட்டும் சரிவில் காணப்படுகின்றது. இதில் பிஎஸ்இ மெட்டல்ஸ் 1% மேலாகவும், மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாகவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பிபிசிஎல், ஹிண்டால்கோ, டாடா கன்சியூமர் புராடக்ஸ், ஐடிசி, எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஈச்சர் மோட்டார்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், சிப்லா, சன் பார்மா, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன், ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எஃப்.சி, எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், சன் பார்மா, பார்தி ஏர்டெல், டெக் மகேந்திரா பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

சென்செக்ஸ் தற்போது நிலவரம்

சென்செக்ஸ் தற்போது நிலவரம்

தற்போது சென்செக்ஸ் 253.73 புள்ளிகள் அதிகரித்து, 55,097.71 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 74.40 புள்ளிகள் அதிகரித்து, 16,438.80 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. எப்படி இருப்பினும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Opening bell: Sensex trade above 55,000, nifty hit record high

Sensex trade above 55,000, nifty trade at fresh high
Story first published: Friday, August 13, 2021, 10:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X