முதல் முறையாக 56,000 புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..!

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

தொடர்ந்து ஏற்றத்தினைக் கண்டு வரும் சந்தைகள், இன்றும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் டெல்டா வகையான உருமாற்றம் அடைந்த கொரோனா தாக்கத்தின் மத்தியில், பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சரிவினைக் கண்டன. இதற்கிடையில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்பட்டன. எனினும் இந்திய சந்தைகள் தொடர்ந்து சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது.

பொருளாதாரம் குறித்த அச்சம்

பொருளாதாரம் குறித்த அச்சம்

இரண்டாம் கட்ட கொரோனாவினால் சரிவினைக் கண்டுள்ள பொருளாதாரம் மீண்டும் வர, அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. தற்போது வளர்ச்சி பாதைக்கும் திரும்பிக் கொண்டுள்ளது. எனினும் புதிய வகை கொரோனா பரவலானது இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 156.30 புள்ளிகள் அதிகரித்து, 55,948.57 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 39.80 புள்ளிகள் அதிகரித்து, 16,654.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 1233.74 புள்ளிகள் அதிகரித்து, 56,026.01 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 57.60 புள்ளிகள் அதிகரித்து, 16,672.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1,092 பங்குகள் ஏற்றத்திலும், 699 பங்குகள் சரிவிலும், 79 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி தவிர, மற்றவை பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஈச்சர் மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஓ.என்.ஜி.சி, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹீரோ மோட்டோகார், ஹிண்டால்கோ, ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் நிறுவனம், பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.சி.எல் டெக், லார்சன் டாப் கெயினர்களாகவும், இதே டைட்டன் நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோடக் மகேந்திரா, ஐடிசி, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

கவனிக்க வேண்டிய முக்கிய பங்கு

கவனிக்க வேண்டிய முக்கிய பங்கு

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்கு விலையானது தற்போது கிட்டதட்ட 2% ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது 1.81% அதிகரித்து, 1542.25 ரூபாயாக என்.எஸ்.இ-யில் காணப்படுகிறது. இதே பிஎஸ்இ-யில் 1.80% அதிகரித்து, 1542.10 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது இன்று அதிகபட்சமாக 1564.75 ரூபாய் வரையில் சென்றும், குறைந்த பட்சம் தற்போது வரையில் 1538.05 ரூபாயாகவும் காணப்படுகிறது.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

தற்போது சென்செக்ஸ் 262.72 புள்ளிகள் அதிகரித்து, 56,054.99 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 74.1 புள்ளிகள் அதிகரித்து, 16,688.70 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இது இன்னும் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

52 வார உச்சத்தில் ஜூபிலியண்ட் ஃபுட்

52 வார உச்சத்தில் ஜூபிலியண்ட் ஃபுட்

ஜீபிலியண்ட் ஃபுட் பங்கின் விலையானது இன்று 6% அதிகரித்துள்ளது. இது 52 வார உச்சமான 4,166.40 ரூபாயினை தொட்டுள்ளது. இது கடந்த மாதத்தில் 33% அதிகரித்திருந்தது குரிப்பிடத்தக்கது. கடந்த மாதத்தில் 227.90 ரூபாய் அதிகரித்துள்ளது, கடந்த மாதத்தில் விலை 4117 ரூபாய் என்ற லெவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கொரோனாவிற்கு பிறகு மீண்டுள்ளதாக கூறியதையடுத்து இந்த ஏற்றத்தினை கண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+