நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக சென்செக்ஸ் 56,000 புள்ளிகளுக்கு மேலாகவே இருந்து வருகின்றது.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ந்து சந்தைகள் ஏற்றத்தினை கண்டு வருகின்றன. எனினும் உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா பரவல் காரணமாக, வளர்ச்சி கண்டு வரும் பொருளாதாரம் சரியுமோ என்ற அச்சமும் சந்தையில் நிலவி வருகின்றது.
இதற்கிடையில் இன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் சந்தையில் ஏற்ற இறக்கலாம் என்ற நிலையில், தற்போது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.
சந்தைக்கு சாதகமான காரணிகள்
குறிப்பாக கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தையானது ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து ஆசிய சந்தைகள் பலவும் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தைகள் ஏற்றத்தில் இருக்காலம் என்றாலும், இன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால், வர்த்தகர்கள் சற்று கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 126.75 புள்ளிகள் அதிகரித்து, 56,070.96 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 4 புள்ளிகள் குறைந்து, 16,630.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 2.91 புள்ளிகள் அதிகரித்து, 55,947.12 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 2.80 புள்ளிகள் அதிகரித்து, 16,637.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1005 பங்குகள் ஏற்றத்திலும், 525 பங்குகள் சரிவிலும், 77 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் கூட்ஸ், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ், நிஃப்டி பிஎஸ்இ தவிர, மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி லைஃப், அதானி போர்ட்ஸ், ஹெச்.சி.எல் டெக், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பார்தி ஏர்டெல், பவர் கிரிட் கார்ப், ஈச்சர் மோட்டார்ஸ், என்.டி.பி.சி, ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், ஹெச்.சி.எல் டெக், ஹெச்.யு.எல், பஜாஜ் பின்செர்வ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இதே பார்தி ஏர்டெல், பவர் கிரிட் கார்ப், மாருதி சுசூகி, என்.டி.பி.சி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று அதிகரித்து 74.22 ரூபாயாக பெரியளவில் மாற்றமின்றி தொடங்கியுள்ளது. இதன் முந்தைய அமர்வின் முடிவு விலையானது 74.25 ரூபாயாகும்.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 136.43 புள்ளிகள் அதிகரித்து, 56,080.64 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 37.60 புள்ளிகள் அதிகரித்து, 16,672.25 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications