தொடர் லாபம் தான்.. 57,400-க்கு மேல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டி 17,100-க்கு அருகில் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வரும் நிலையில்,இன்றும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிபுணர்கள் சமீபத்தில் சந்தை எப்போதெல்லாம் சரிகின்றதோ அப்பதெல்லாம் வாங்கலாம். சந்தை சரியும் எந்த வாய்ப்பினையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் சந்தை மீண்டும் புதிய உச்சத்தினை தொடும் என்றும் கூறியிருந்தனர். அதனை நிரூபிக்கும் விதமாக சந்தையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இந்த நிலையில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

அமெரிக்காவின் வேலை வாய்ப்பு தரவானது எதிர்பார்ப்பினை விட குறைந்த நிலையில், டாலரின் மதிப்பானது சற்று அழுத்தத்தினை கண்டது. ஏனெனில் இந்த டேட்டாவானது சந்தை வளர்ச்சி பாதைக்கு வந்து கொண்டுள்ள நிலையில், சாதகமாக வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் அப்படி எதிர்பார்த்த அளவு டேட்டா சாதகமாக இல்லை. இதனால் மீண்டும் அமெரிக்க பத்திரம் வாங்குவதை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திரம் வாங்க ஊக்கப்படுத்தலாம்

பத்திரம் வாங்க ஊக்கப்படுத்தலாம்

கடந்த வார கூட்டத்தில் ஜெரோம் பவல் பத்திரம் வாங்குவதை படிப்படியாக குறைக்கப்படும் என்று கூறியிருந்தது நினைவுக்கூறத்தக்கது. எனினும் அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான குறியீடு உச்சம் தொட்டுள்ள நிலையில், அமெரிக்க சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்தன. இதனையடுத்து இந்திய சந்தையும் இன்று காலையில் பெரியளவில் மாற்றமின்றி தான் தொடங்கியது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 82.37 புள்ளிகள் அதிகரித்து, 57,420.58 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 59.90 புள்ளிகள் அதிகரித்து, 17,136.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 37.42 புள்ளிகள் அதிகரித்து, 57,375.63 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 7.50 புள்ளிகள் அதிகரித்து, 17.083.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 977 பங்குகள் ஏற்றத்திலும், 392 பங்குகள் சரிவிலும், 74 மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ குறியீடுகள் தவிர மற்றவை பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடுகள் 1% மேலாகவும், மற்றவை 1% கீழாகவும் ஏற்றம் கண்டு காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி லைஃப், ஹெச்யு.எல், ஸ்ரீ சிமெண்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், சிப்லா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கோல் இந்தியா, ஐஓசி, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்யு.எல், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே மாருதி சுசூகி, எம்&எம், டெக் மகேந்திரா, பஜாஜ் பின்செர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 0.11% சரிந்து, 73.067 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த அமர்வில் 72.990 ரூபாயாக முடிவடைந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 72.985 ரூபாயாக தொடங்கியது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 152.65 புள்ளிகள் அதிகரித்து, 57,490.86 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 52.65 புள்ளிகள் அதிகரித்து, 17,128.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+