நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் புதிய வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வந்த இந்திய சந்தைகள், இன்று மீண்டும் புதிய உச்சத்தில் காணப்படுகின்றன.
எனினும் சந்தையில் மூன்றாவது அலை குறித்தான பயமும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
தொடர்ந்து புதிய உச்சம்
கொரோனாவினால் சரிவினைக் கண்டுள்ள பொருளாதாரம், தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. வேலை வாய்ப்புகளும் பெருகி வருகின்றன. இதனால் பொருளாதாரம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்ற கருத்துகளும் நிலவி வருகின்றன. இதனால் சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றன.
ஏற்றத்தில் அமெரிக்க சந்தைகள்
அமெரிக்க சந்தைகள் உச்சத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் தொடங்கியுள்ளன. இதன் எதிரொலியாக இந்திய சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கியுள்ளன. தற்போது சந்தையில் தடுப்பூசி போடப்படும் விகிதமும் சந்தையினை பொறுத்து, பொருளாதாரம் ஏற்றம் காணலாம்.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 112.61 புள்ளிகள் அதிகரித்து, 56,071.59 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 17.10 புள்ளிகள் அதிகரித்து, 16,641.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 124.90 புள்ளிகள் அதிகரித்து, 56,083.88 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 45.80 புள்ளிகள் அதிகரித்து, 16,670.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1,306 பங்குகள் ஏற்றத்திலும், 408 பங்குகள் சரிவிலும், 65 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ ஹெல்த்கேர் உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலும், மற்ற குறியீடுகள் அனைத்தும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி லைஃப், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், ஹிண்டால்கோ, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், பார்தி ஏர்டெல், டைட்டன் நிறுவனம், பஜாஜ் பின்செர்வ், டிவிஸ் லேப்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டிசிஎஸ், ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், நெஸ்டில், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், பார்தி ஏர்டெல், டைட்டன் நிறுவனம், பஜாஜ் பின்செர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றம் இல்லாமல், 74.20 ரூபாயாக காணப்படுகிறது.
தற்போது சென்செக்ஸ் 124.13 புள்ளிகள் அதிகரித்து, 56,083.11 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 45.70 புள்ளிகள் அதிகரித்து, 16,670.30 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications