opening bell.. சென்செக்ஸ் 48,800க்கு கீழ் வர்த்தகம்.. நிஃப்டி 14,400க்கு அருகில் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. கடந்த அமர்வில் பலத்த வீழ்ச்சியினை கண்ட இந்திய சந்தைகள், இன்றும் சரிவில் தான் காணப்படுகின்றன.

அதிலும் இன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால், சற்று ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் முதலீட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்த லாபத்தினை புக் செய்யலாம். அல்லது அடுத்த கான் டிராக்டில் ரோல் ஓவர் செய்யலாம். இதனால் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும். ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

அமெரிக்கா டாலரின் மதிப்பு அதிகரித்து காணப்பட்டாலும், இரண்டாம் கட்ட கொரோனா பரவலானது வேகமெடுத்து வருகின்றது. இதன் காரணமாக சந்தைகள் சரிவிலேயே காணப்படுகின்றன

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 36.58 புள்ளிகள் குறைந்து, 49,143.73 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 4.40 புள்ளிகள் குறைந்து, 14,545.00 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 296.03 புள்ளிகள் குறைந்து, 48,884.28 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 84.20 புள்ளிகள் குறைந்து, 14,465.20 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 518 பங்குகள் ஏற்றத்திலும், 1060 பங்குகள் சரிவிலும், 65 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், பிபிசிஎல், இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி மட்டும் டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பைனான்ஸ், இந்தஸிந்த் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 396.32 புள்ளிகள் குறைந்து, 48,783.99 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 110.60 புள்ளிகள் குறைந்து, 14,438.80 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

இந்தியா உள்பட பல நாடுகளிலும் இரண்டாம் கட்ட கொரோனா பரவல், சர்வதேச சந்தைகளின் நிலவரம், எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி உள்ளிட்ட பல காரணிகளால் சந்தை இன்று சற்று சரிவில் காணப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+