opening bell.. சரிவில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் மீண்டும் 50,000க்கு கீழ் வர்த்தகம்.. !

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன. கடந்த அமர்வில் சற்று ஏற்றத்தில் முடிவடைந்தது. எனினும் நாளை எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால், சற்று ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏனெனில் முதலீட்டாளர்கள் தங்களுக்கு கிடைத்த லாபத்தினை புக் செய்யலாம். அல்லது ரோல் ஓவர் செய்யலாம். இதனால் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும். ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

சர்வதேச சந்தையில் நிலவி வரும் காரணிகளுக்கு மத்தியில், தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர லாபம், பணவீக்கத்திற்கு வழிவகுக்குமோ? என்ற கவலையும் ஏற்படுத்தியுள்ளது. அதோடு கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலும் அதிகரித்து வருகிறது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. அதோடு அமெரிக்க சந்தைகள் சற்று சரிவில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் சிலவும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 174.81 புள்ளிகள் குறைந்து, 49,876.63 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 90.10 புள்ளிகள் குறைந்து, 14,724.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 302.03 புள்ளிகள் குறைந்து, 49,749.41 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 87.30 புள்ளிகள் குறைந்து, 14,727.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 494 பங்குகள் ஏற்றத்திலும், 668 பங்குகள் சரிவிலும், 66 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, சிப்லா, பவர் கிரிட் கார்ப், என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி, கெயில் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, பவர் கிரிட் கார்ப், என்டிபிசி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 312.41 புள்ளிகள் குறைந்து, 49,739.03 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 90.15 புள்ளிகள் குறைந்து, 14,724.60 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

அதிகரித்து வரும் அமெரிக்க பத்திர லாபம், இரண்டாம் கட்ட கொரோனா பரவல், சர்வதேச சந்தைகளின் நிலவரம், எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி உள்ளிட்ட பல காரணிகளால் சந்தை இன்று சற்று சரிவில் காணப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+