முதல் நாளே தூள் கிளப்பும் சந்தைகள்.. சென்செக்ஸ் 51,700 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகம்.. !

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று சரிவில் தொடங்கினாலும், தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

அமெரிக்க பங்கு சந்தைகள் முந்தைய அமர்வில் ஏற்றத்தில் முடிந்ததையடுத்து, ஆசிய பங்கு சந்தைகள் இன்று ஏற்றத்தில் தொடங்கியுள்ளன. இதனையடுத்து இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகிறது.

வலுவான பொருளாதாரம் குறித்த அறிக்கைகள், வேலையின்மை குறித்த சாதகமான தரவுகள், பல சாதகமான சர்வதேச காரணிகள் எல பலவும் சந்தைக்கு சாதகமான வந்து கொண்டுள்ளன. இதற்கிடையில் தான் சந்தையானது சரிவில் தொடங்கியிருந்தாலும், தற்போது ஏற்றத்தில் காணப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 144.70 புள்ளிகள் அதிகரித்து, 51,567.58 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி சற்று 50 புள்ளிகள் அதிகரித்து, 15,485.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. எனினும் தொடக்கத்தில் சென்செக்ஸ் 31.44 புள்ளிகள் குறைந்து, 51,391.44 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 13.70 புள்ளிகள் குறைந்து, 15,422 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1247 பங்குகள் ஏற்றத்திலும், இதே 631 பங்குகள் சரிவிலும், 90 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ டெக் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டிவிஸ் லேப், ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், ஐடிசி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எம்&எம், அதானி போர்ட்ஸ், இன்ஃபோசிஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே, எம்&எம், இன்ஃபோசிஸ், சன் பார்மா, டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு


டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.39 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தியய அமர்வில் 72.43 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 281.59 புள்ளிகள் அதிகரித்து, 51,704.47 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 69.25 புள்ளிகள் அதிகரித்து, 15,504.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+