52,650 கீழ் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,750-க்கு அருகில் வர்த்தகம்.. லாபம் தான்..!

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே சற்று ஏற்ற இறக்கத்தினைக் கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.

அமெரிக்காவில் தற்போதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் மீண்டு வர தாமதமாகலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் வட்டி விகிதம் அதிகரிப்பு என்பது தற்போதைக்கு இருக்காது என்ற கருத்தும் நிலவி வருகின்றது.

கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்

கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்

இதற்கிடையில் இன்று சில வலுவான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், அதிகரித்து வரும் புதிய வகை கொரோனாவின் தாக்கம், இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சந்தைகள் இன்று சாதகமான ஏற்றத்தில் காணப்படுகின்றன. அமெரிக்காவின் மத்திய வங்கியானது பொருளாதாரம் இன்னும் மீண்டு வரவில்லை. இன்னும் வேலை வாய்ப்பு சந்தையில் இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தினை மீட்க இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்றும் கூறியுள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 157.19 புள்ளிகள் அதிகரித்து, 52,600.90 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 4 புள்ளிகள் குறைந்து, 15,705.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 224.86 புள்ளிகள் அதிகரித்து, 52,668.57 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 70.60 புள்ளிகள் அதிகரித்து, 15,780 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,484 பங்குகள் ஏற்றத்திலும், 353 பங்குகள் சரிவிலும், 61 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ ஆயில் & கேஸ் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், ஹெச்.சி.எல் டெக், ஹிண்டால்கோ, டைட்டன் நிறுவனம், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே மாருதி சுசூகி, ஒ.என்.ஜி.சி, சிப்லா, கோல் இந்தியா, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.சி.எல் டெக், டைட்டன் நிறுவனம், டாடா ஸ்டீல், எம் & எம், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே மாருதி சுசூகி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், பவர் கிரிட் கார்ப், ஹெச்.டி.எஃப்.சி, லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 179.56 புள்ளிகள் அதிகரித்து, 52,623.27 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 52.35 புள்ளிகள் அதிகரித்து, 15,7.61.75 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

பல சர்வதேச காராணிகள் சாதகமாக உள்ள நிலையில், கொரோனா மூன்றாம் அலையின் அச்சத்தினால் சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+