இது முதலீட்டுக்கு சரியான தருணம் தான்.. சென்செக்ஸ் 52,700 கீழ் வர்த்தகம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவில் காணப்படுகின்றன.

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்று பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் சற்று சரிவில் காணப்படுகிறது.

தற்போது ஆய்வாளர்கள் மூன்றாவது அலை குறித்தான எச்சரிக்கையை விடுத்து வரும் நிலையில், இதனால் இனி எந்த மாதிரியான தாக்கம் இருக்க போகிறதோ? என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

பொருளாதாரம் பற்றிய கேள்விக்குறி

பொருளாதாரம் பற்றிய கேள்விக்குறி

முதல் மற்றும் இரண்டாம் கட்ட கொரோனா அலை காரணமாக சரிவினைக் கண்டுள்ள பொருளாதாரமே, இது வரையில் மீண்டபாடாக இல்லை. மாறாக இன்னும் சில காலம் ஆகும் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில் மூன்றாம் அலை குறித்த அச்சம் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்த போகிறதோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. மொத்தத்தில் பொருளாதாரம் பற்றிய கேள்விக்குறி எழுந்துள்ளது.

முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம்

முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம்

ஏற்கனவே பல லட்சம் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது தான் சற்றே ஆறுதல் அடையும் விதமாக மீண்டு வரத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் மீண்டும் இன்னொரு லாக்டவுன் என்பதை இந்தியா தாங்குமா? இந்த புதிய வகை கொரோனா பரவலானது இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால் அன்னிய முதலீடுகள், உள்நாட்டு முதலீடுகள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருப்பினும் தற்போதைய நிலவரப்படி, சந்தை சரியும் போது வாங்கி வைக்கலாம் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அப்படி பார்க்கும்போது இது நல்ல தருணமாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று தடுமாற்றத்தில் தான் காணப்பட்டது.. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று சரிவில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 10.76 புள்ளிகள் குறைந்து, 52,758.97 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 2.50 புள்ளிகள் குறைந்து, 15,809.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. நிஃப்டி குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, லார்சன், ஹெச்.சி.எல் டெக், ஓ.என்.சி.ஜி, என்.டி.பி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே யுபிஎல், ஹெச்.டி.எஃப்.சி, மாருதி சுசூகி, நெஸ்டில் ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, லார்சன், ஹெச்.சி.எல் டெக், என்.டி.பி.சி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி, மாருதி சுசூகி, ஹெச்.யு.எல், நெஸ்டில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று குறைந்து, 74.58 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.49 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 104.97 புள்ளிகள் குறைந்து, 52,664.76 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 34.35 புள்ளிகள் குறைந்து, 15,778.80 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Opening bell: Sensex trade below 52,700, nifty trade nearly 15,800

Market update.. Opening bell: Sensex trade below 52,700, nifty trade nearly 15,800
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X