53,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்த சென்செக்ஸ்.. நிஃப்டியின் நிலவரம் என்ன..?!

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் சற்று சரிவில் காணப்படுகின்றன.

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்றும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.

பல வலுவான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், அதிகரித்து வரும் புதிய வகை கொரோனாவின் தாக்கம், இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொருளாதாரம் என்னவாகுமோ? இது சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற கவலையையும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

சந்தைக்கு சாதகமான காரணிகள்

சந்தைக்கு சாதகமான காரணிகள்

அமெரிக்க பங்கு சந்தையானது கடந்த அமர்வில் ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், நாஸ்டாக் வரலாற்று உச்சத்தில் முடிவடைந்துள்ளது. இது அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் கட்டுபாடுகள் அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. எனினும் ஆசிய சந்தைகள் பலவும் இன்று காலையில் சரிவிலேயே காணப்பட்டன.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று தடுமாற்றத்தில் தான் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் பெரியளவில் மாற்றமின்றி தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 3.33 புள்ளிகள் அதிகரித்து, 53,058.09 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 8 புள்ளிகள் குறைந்து, 15,871.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,379 பங்குகள் ஏற்றத்திலும், 553 பங்குகள் சரிவிலும், 81 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஸ்ரீ சிமெண்ட்ஸ், இந்தஸிந்த் வங்கி, ஐ.ஓ.சி., டைட்டன் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஓ.என்.ஜி.சி., ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, பஜாஜ் ஆட்டோ, டைட்டன் நிறுவனம், என்.டி.பி.சி, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.யு.எல், சன் பார்மா, கோடக் மகேந்திரா, நெஸ்டில், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 20 பைசா சரிந்து, 74.81 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.61 ரூபாயாக முடிவடைந்தது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 125.14 புள்ளிகள் குறைந்து, 52,929.62 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 41 புள்ளிகள் குறைந்து, 15,838.65 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+