நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
அமெரிக்க சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் முடிந்த நிலையில் ஆசிய சந்தைகளும் பலவும் ஏற்றத்தில் தான் தொடங்கின.
பொருளாதாரம் குறித்த சாதகமான கணிப்புகள் தொடர்ந்து சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், மத்திய வங்கிகள் மேலும் பொருளாதாரத்தினை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
கவனிக்க வேண்டிய காரணிகள்
பல வலுவான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், அதிகரித்து வரும் புதிய வகை கொரோனாவின் தாக்கம், இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் நாளை தொடங்கவிருக்கும் மத்திய வங்கியின் கூட்டத்தில் சந்தைகு சாதகமான அறிவிப்புகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தைகள் இன்றும் ஏற்றத்தில் காணப்படுகிறது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 245.86 புள்ளிகள் அதிகரித்து, 54,615.63 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 31.70 புள்ளிகள் அதிகரித்து, 16,290.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ ஸ்மால் கேப்ஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ் 1%, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் உள்ளிட்ட குறியீடுகள் 1% கீழாகவும் உள்ளன. மற்றவை பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஈச்சர் மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்.சி.எல் டெக், விப்ரோ, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எஸ்பிஐ, இந்தஸிந்த் வங்கி, ஐஓசி, ஓ.என்.ஜி.சி, உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா, கோடக் மகேந்திரா, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எஸ்பிஐ, இந்தஸிந்த் வங்கி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றமின்றி, 74.18 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.16 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 82.24 புள்ளிகள் குறைந்து, 54,287.53 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 21.40 புள்ளிகள் குறைந்து, 16,237.40 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
லாபத்தினை புக் செய்யும் முதலீட்டாளர்கள்
தொடக்கத்தில் சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியிருந்தாலும், முதலீட்டாளர்கள் சந்தையானது புதிய உச்சத்தில் உள்ள நிலையில், லாபத்தினை புக் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் சந்தையானது ஏற்றத்தினை தொடர்ந்து சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications