இறுதி நாள்.. லாபத்தினை புக் செய்யும் முதலீட்டாளர்கள்.. 56,000 கீழாக வர்த்தகமாகும் சென்செக்ஸ்..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக சென்செக்ஸ் சரிவிலும், நிஃப்டி ஏற்றத்திலும் காணப்படுகின்றது.

கடந்த அமர்வில் அமெரிக்க டாலரின் மதிப்பு உச்சத்தினை தொட்டதையடுத்து, பத்திர சந்தையின் லாபமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி பத்திரங்களை வாங்க தயாராக உள்ள நிலையில் டாலரின் மதிப்பானது ஏற்றம் கண்டது

எனினும் அமெரிக்காவில் முக்கிய தூண்டுதல் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வரலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் காத்திருப்பதால் சந்தைகள் கடந்த அமர்வில் சந்தைகள் சற்று குறைந்து முடிவடைந்தன. இதற்கிடையில் இன்று இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாள் என்பதால் முதலீட்டாளார்கள் லாபத்தினை புக் செய்தால், ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம். ஆக முதலீட்டாளார்கள் கவனமுடன் வர்த்தகம் செய்ய வேண்டும்.

புராபிட் புக்கிங் செய்யலாம்

புராபிட் புக்கிங் செய்யலாம்

இதனையடுத்து இன்று காலையில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இதனை தொடர்ந்து இந்திய சந்தைகளும் தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. அதோடு இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பது புராபிட் புக்கிங் செய்யலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 56.13 புள்ளிகள் அதிகரித்து, 56,005.23 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 12.92 புள்ளிகள் குறைந்து, 16,624 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 32.95 புள்ளிகள் குறைந்து, 55,916.15 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி, 6.08 புள்ளிகள் குறைந்து, 16,630.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1042 பங்குகள் ஏற்றத்திலும், இதே 526 பங்குகள் சரிவிலும், 73 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் குறியீடுகள்

இன்டெக்ஸ் குறியீடுகள்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் கூட்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலும், மற்ற குறியீடுகள் ஏற்றத்திலும் காணப்படுகின்றன. பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ் 1% மேலாகவும், மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாகவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, லார்சன், சன் பார்மா, அல்ட்ராடெக் சிமெண்ட், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ வங்கி, இந்தஸிந்த் வங்கி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன், சன் பார்மா, அல்ட்ராடெக் சிமெண்ட், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஈச்சர் மோட்டார்ஸ், இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

சென்செக்ஸ் தற்போது நிலவரம்

சென்செக்ஸ் தற்போது நிலவரம்

தற்போது சென்செக்ஸ் 23.48 புள்ளிகள் அதிகரித்து, 55,972.58 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 20.55 புள்ளிகள் அதிகரித்து, 16,657.45 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. எப்படி இருப்பினும் இன்று வார இறுதி வர்த்தக நாள் என்பதால், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+