நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.
கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்றும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.
பல வலுவான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், அதிகரித்து வரும் புதிய வகை கொரோனாவின் தாக்கம், இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய சந்தைகளும் பெரியளவில் மாற்றமின்றி தடுமாற்றத்தில் காணப்படுகின்றன.
சந்தைக்கு சாதகமான காரணிகள்
குறிப்பாக அமெரிக்க பங்கு சந்தையானது கடந்த அமர்வில் ஐந்தாவது நாளாக மீண்டும் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. எனினும் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வரும் நிலையில், இது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய சந்தையில் முதலீடுகள் குறைந்துள்ளன. இது சந்தையின் சரிவுக்கு வழிவகுத்துள்ளது.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 56.41 புள்ளிகள் அதிகரித்து, 52,539.12 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 42.40 புள்ளிகள் அதிகரித்து, 15,763.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 10.57 புள்ளிகள் குறைந்து, 52,472.14 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 1.10 புள்ளிகள் குறைந்து, 15,720.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,376 பங்குகள் ஏற்றத்திலும், 728 பங்குகள் சரிவிலும், 76 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக் தவிர, மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ, எம்&எம், டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே கிளான்ட், இந்தஸிந்த் வங்கி, ஸ்ரீ சிமெண்ட்ஸ், இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ, எம் & எம், மாருதி சுசூகி, கோடக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே இந்தஸிந்த் வங்கி, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், என்.டி.பி.சி, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சந்தையில் தற்போதைய நிலவரம்
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 37.09 புள்ளிகள் அதிகரித்து, 52,520.01 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 18.05 புள்ளிகள் அதிகரித்து, 15,739.55 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
கொரோனா மூன்றாம் அலையின் அச்சத்தினால் சந்தைகள் மீடியம் டெர்மில் சற்று சரியும் விதமாகவே காணப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?



Click it and Unblock the Notifications