காளையா? கரடியா போராட்டத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,800 அருகில் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்று சாதகமான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.

எனினும் மூன்றாவது அலை குறித்தான பயமும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம்

முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம்

கடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட கொரோனாவினால் சரிவினைக் கண்டுள்ள பொருளாதாரம் மீண்டு வர, அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், இன்னும் சிறிது காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய வகை கொரோனா பரவலானது இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 128.54 புள்ளிகள் அதிகரித்து, 52,989.72 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 9.70 புள்ளிகள் அதிகரித்து, 15,808.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று சரிவில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 57.25 புள்ளிகள் குறைந்து, 52,803.93 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 18.30 புள்ளிகள் குறைந்து, 15,800 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1095 பங்குகள் ஏற்றத்திலும், 748 பங்குகள் சரிவிலும், 79 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. நிஃப்டி குறியீட்டில் உள்ள யுபிஎல், ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பின்செர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், கிளான்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓ.என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ், டைட்டன் நிறுவனம், எம்& எம், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பின்செர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டைட்டன் நிறுவனம், அல்ட்ராடெக் சிமெண்ட், எம்& எம், ரிலையன்ஸ், ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 74.60 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.55 ரூபாயாக முடிவடைந்திருந்தது. தற்போது சென்செக்ஸ் 12.23 புள்ளிகள் குறைந்து, 52,863.78 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 4.35 புள்ளிகள் குறைந்து, 15,813.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+