பலத்த எதிர்பார்ப்புகளுக்க்கு மத்தியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 4வது பட்ஜெட்டினை தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில் இதன் எதிரொலி இந்திய பங்கு சந்தையில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படியிருப்பினும் பட்ஜெட்டில் தொழிற்துறையை ஊக்குவிக்கும் விதமாக வரலாம் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. இதற்கிடையில் தான் தொடக்கத்திலேயே ஏற்றத்தில் காணப்படுகிறது.
இதற்கிடையில் பல்வேறு காரணிகளும் சந்தைக்கு சாதகமாக உள்ள நிலையில் சந்தையானது ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.
சர்வதேச சந்தைகள்
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது ஏறத்திலேயே முடிவடைந்தது, எனினும் அமெரிக்க டாலரின் மதிப்பானது மூன்று வாரத்தில் இல்லாத அளவு சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. இதற்கிடையில் இன்று தொடக்கத்திலேயே இந்திய சந்தையும் நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது பங்குகளை குறைந்த விலையில் முதலீட்டாளர்கள் வாங்கியதால் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 632.12 புள்ளிகள் அதிகரித்து, 58,646.29 புள்ளிகளாகவும், நிஃப்டி 135.80 புள்ளிகள் அதிகரித்து, 17,475.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
தொடக்கத்தில் சென்செக்ஸ் 544.97 புள்ளிகள் அதிகரித்து, 58,559.14 புள்ளிகளாகவும், நிஃப்டி 145.70 புள்ளிகள் அதிகரித்து, 17,485.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1510 பங்குகள் ஏற்றத்திலும், 473 பங்குகள் சரிவிலும், 65 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகின்றது.
இன்டெக்ஸ் & நிஃப்டி குறியீடு
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பிரிட்டானியா, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.பி.சி.எல் , டாடா மோட்டார்ஸ், பிபிசிஎல், ஐஓசி, அதுல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஐடிசி, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
தற்போது நிலவரம்
9.40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 674.43 புள்ளிகள் அல்லது 1.16% அதிகரித்து, 58,688.60 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி183.75 புள்ளிகள் அல்லது 1.06% அதிகரித்து, 17,523.60 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications