இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத் தொடக்கத்தில் இருந்து பலத்த சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று ஏற்றத்தில் காணப்பட்டது.
இது தொடர்ந்து அன்னிய முதலீட்டு விகிதமானது வெளியேறி வந்த நிலையில், இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து பலமான ஏற்றத்தில் காணப்படுகின்றது.
அமெரிக்காவின் மத்திய வங்கியான வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
6 நாளில் 4000 புள்ளிகளை காலி செய்த சென்செக்ஸ்.. சம்பாதித்ததெல்லாம் போச்சே..!

முக்கிய முடிவு
எனினும் இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படாவிட்டாலும், மார்ச் மாதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பத்திர கொள்முதலும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச சந்தைகளில் அழுத்தத்தினை ஏற்படுத்தியிருந்தாலும், நடப்பு வாரத் தொடக்கத்தில் இருந்து பலத்த சரிவினைக் கண்ட நிலையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்க சரியான இடமாகவும் பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தைகள்
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவில் காணப்பட்டது. இதன் எதிரொலி ஆசிய சந்தைகள் பலவும் இன்று சற்று சரிவிலேயே காணப்படுகின்றன. எனினும் இந்திய சந்தையானது நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது பங்குகளை குறைந்த விலையில் முதலீட்டாளர்கள் வாங்கியதால் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொடக்கம் எப்படி?
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 427.18 புள்ளிகள் அதிகரித்து, 57,704.12 புள்ளிகளாகவும், நிஃப்டி 133.10 புள்ளிகள் அதிகரித்து, 17,243.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இன்டெக்ஸ்
சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ ஆயில் & கேஸ்,பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஐடி உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதே நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்திலும், மற்றவை 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, என்.டி.பி.சி, எம்&எம், ஐஓசி, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினர்களாகவும், இதே மாருதி சுசுகி, பவர் கிரிட் கார்ப், எஸ்பிஐ உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, பார்தி ஏர்டெல், பவர் கிரிட் கார்ப், இந்தஸிந்த் வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதெ ஏசியன் பெயிண்ட்ஸ், விப்ரோ, ரிலையன்ஸ்,ஹெச்டிஎஃப்சி வங்கி,ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போது நிலவரம்
10.34 மணி நிலப்படி, சென்செக்ஸ் 614.80 புள்ளிகள் அல்லது 1.07% அதிகரித்து, 57,891.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 208.20 புள்ளிகள் அல்லது 1.22 % அதிகரித்து, 17,318.35 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.