7 அமர்வுகளுக்கு பிறகு சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி.. என்ன காரணம்..!

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் இன்று சற்று சரிவில் காணப்படுகின்றன.

தொடர்ச்சியாக கடந்த ஏழு அமர்வுகளாக ஏற்றம் கண்டு வந்த சந்தைகள், இன்று சற்று சரிவில் காணப்படும் நிலையில் ஏன் இந்த சரிவு? என்ன காரணம்? இது இன்னும் எவ்வளவு சரியலாம்? நிபுணர்கள் கூறுவதென்ன?

கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் வலுவான ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. இது அமெரிக்காவின் டெக்னாலஜி நிறுவன பங்குகள் மற்றும் ஹெல்த்கேர் பங்குகள் ஏற்றம் கண்டதையடுத்தும் சந்தைகள் ஏற்றம் கண்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சரிவுக்கு முக்கிய காரணி

சரிவுக்கு முக்கிய காரணி

இதனையடுத்து ஆசிய சந்தைகள் சில ஏற்றத்தில் காணப்பட்டாலும், பலவும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தைகள் தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கியிருந்தாலும், தற்போது சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. இது சீனாவில் தற்போது கொரோனா, நிலக்கரி பற்றாக்குறை, மின்வெட்டு உள்ளிட்ட பல காரணிகளால் தொழிற்துறை உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்படலாம். இது மெதுவான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால், பல ஆசிய நாடுகளின் சந்தையும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.

புராபிட் புக்கிங்கும் காரணமாக இருக்கலாம்

புராபிட் புக்கிங்கும் காரணமாக இருக்கலாம்

கடந்த ஏழு அமர்வுகளாக இந்திய சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், சந்தையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தது. மேலும் புதிய உச்சத்தினையும் கடந்த அமர்வில் தொட்டது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் உச்சத்தில் தங்களது லாபத்தினை புக் செய்ய தொடங்கியிருக்கலாம் என்பதாலும் சந்தையானது சரிவினைக் காணத் தொடங்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

கடந்த சில அமர்வுகளாகவே அந்நிய முதலீடுகளின் வரத்தானது, சந்தையில் அதிகரித்து வந்தது. இதனால் கடந்த சில வாரங்களாக சந்தையானது தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. ஆனால் அக்டோபர் 19 நிலவரப்படி, அந்நிய நிறுவன முதலீடுகள் 505.79 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 2,578.22 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதற்கிடையில் தான் சந்தையானது சற்றே ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.

இன்று சந்தைகள் தொடக்கம்

இன்று சந்தைகள் தொடக்கம்

இதற்கிடையில் இன்று ஃப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 48.99 புள்ளிகள் அதிகரித்து, 61,765.04 புள்ளிகளாக காணப்பட்டது. இதே தேசிய பங்கு சந்தை நிப்டி குறியீடு 44.90 புள்ளிகள் அதிகரித்து, 18,373.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து சந்தையின் தொடக்கத்திலும் ஏற்றத்திலேயே காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 118.33 புள்ளிகள் அதிகரித்து, 61,834.38 புள்ளிகளாகவும், இதே நிப்டி 22.50 புள்ளிகள் அதிகரித்து, 18,441.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து 955 பங்குகள் ஏற்றத்திலும், 662 பங்குகள் சரிவிலும், 114 பங்குகள் மாற்றம் இல்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால்கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. இதனை தவிர மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் பெரியளவில் ஏற்றம் காணவில்லை.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, இந்தஸிந்த் வங்கி, பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹிண்டால்கோ, ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் பின்செர்வ், ஹீரோ மோட்டோகார்ப், கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, இந்தஸிந்த் வங்கி, ஹெச்.சி.எல் டெக், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ்ம் ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கி சரிவினைக் கண்ட இந்திய சந்தைகள், தற்போது (10.11 மணியளவில்) சென்செக்ஸ் 135.76 புள்ளிகள் அதிகரித்து, 61,851.81 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 35.65 புள்ளிகள் அதிகரித்து, 18,454.40 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இது பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியிலும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+