கடந்த சில தினங்களாக சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று சற்று ஏற்றத்தில் காணப்படுகிறது.
இது வரவிருக்கும் பட்ஜெட், நேற்று நடந்த எஃப்&ஓ எக்ஸ்பெய்ரி, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் என்ற பல காரணங்களினால் சந்தை சரிவினைக் கண்டு வந்தது.
இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சந்தை சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 522.38 புள்ளிகள் அதிகரித்து, 47,396.74 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 34.80 புள்ளிகள் அதிகரித்து, 13,852.30 புள்ளிகள் ஆகவும் காணப்பட்டது.

இந்திய சந்தைகள் தொடக்கம்
இதற்கிடையில் சந்தையின் தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 343.50 புள்ளிகள் அதிகரித்து, 47,217.86 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 102.90 புள்ளிகள் அதிகரித்து, 13,920.40 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது. இதில் 928 பங்குகள் ஏற்றத்திலும், 203 பங்குகள் சரிவிலும், இதே 26 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
இதற்கிடையில் நிஃப்டி, பிஎஸ்இ குறியீடுகளில், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், எஃப் எம் சி ஜி. ஹெல்த்கேர், டெக் உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இதே மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, எம்&எம், டாடா மோட்டேர்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்யுஎல், ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுசூகி, ஜே எஸ் டபள்யூ ஸ்டீல், டைட்டன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம்&எம், இந்தஸிந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச் சிஎல் டெக், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்யுஎல், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

டாலர் Vs ரூபாய்
இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் மாற்றமில்லாமல் 73.03 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 73.04 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
இதற்கிடையில் தற்போது சர்வதேச சந்தையின் எதிரொலியாகவும், அதோடு வரவிருக்கும் பட்ஜெட் காரணத்தினாலும் சந்தை, ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. இது தற்போது சென்செக்ஸ் 39 புள்ளிகள் குறைந்து, 46,849.26 ஆகவும், இதே நிஃப்டி 2.40 புள்ளிகள் அதிகரித்து, 13,819.95.05 ஆகவும் காணப்படுகிறது.