கடந்த சில வர்த்தக அமர்வுகளாக தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இந்திய சந்தைகள் இன்றும் உச்சத்தினை தொட்டு வந்தன. அதிலும் நேற்று முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக வரலாற்றில் முதல் முறையாக 50,000 புள்ளிகளை தொட்டது.
ஆனால் இன்றே அது நிலைக்கவில்லை. ஏனெனில் இன்று காலை தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வருகின்றது.
இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சந்தை சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 139.51 புள்ளிகள் குறைந்து, 49,485.25 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 46.60 புள்ளிகள் அதிகரித்து, 14,637 புள்ளிகள் ஆகவும் காணப்பட்டது. தொடங்கியது.

இதனையடுத்து சந்தையின் தொடக்கத்திலும் சரிவில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 124.75 புள்ளிகள் குறைந்து, 49,500.01 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 25 புள்ளிகள் குறைந்து, 14,565.40 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது. இதில் 682 பங்குகள் ஏற்றத்திலும், 521 பங்குகள் சரிவிலும், இதே 67 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் நிஃப்டி பிஎஸ்இ குறியீடுகள் சிலவற்றை தவிர, மற்றவை சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. மற்றவை மாற்றமில்லாமல் காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப், ஈச்சர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச் யு எல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, ஹிண்டால்கோ, ஐசிஐசிஐ வங்கி, டெக் மகேந்திரா, ஜேஎஸ்டபள்யூ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் ஆட்டோ , ஹெச்யுஎல், மாருதி சுசூகி, இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டெக் மகேந்திரா, என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் மாற்றமில்லாமல் சற்று அதிகரித்து 73.03 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 72.99 ரூபாயாக முடிவடைந்திருந்தது. எனினும் தற்போது 73.01 ரூபாயாக உள்ளது.
இதற்கிடையில் தற்போது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இது தற்போது சென்செக்ஸ் 284.70 புள்ளிகள் குறைந்து, 49,340.06.85 ஆகவும், இதே நிஃப்டி 78.75 புள்ளிகள் குறைந்து, 14,515.60 ஆகவும் காணப்படுகிறது.
இது வாரத்தின் இறுதி நாளான இன்று புராபிட் புக்கிங்க் காரணமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications