இந்திய பங்கு சந்தையானது தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுக்கும் ஒரு சிறப்பான முதலீடாகவும் மாறியுள்ளது.
சமீபத்தில் நிபுணர்கள் இந்திய சந்தை எப்போதெல்லாம் சரிகின்றதோ அப்போதெல்லாம் முதலீடு செய்யலாம். சந்தையானது ஏற்றம் காணும் என்று நிபுணர்கள் கூறினர். அதனை போலவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் வரலாற்று உச்சத்தினை தொட்ட நிலையில், ஆசிய சந்தைகள் பலவும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது. இதனையடுத்து இந்திய பங்கு சந்தைகளும் இன்று தொடக்கத்தில் ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகள் சர்வதேச சந்தை வர்த்தகத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது என்றால் மிகையில்லை.
இந்திய சந்தைகள் தொடக்கம்
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 229.28 புள்ளிகள் அதிகரித்து, 58,359.23 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 116.40 புள்ளிகள் அதிகரித்து, 17,440 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 269.92 புள்ளிகள் அதிகரித்து, 58,399 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 73.70 புள்ளிகள் அதிகரித்து, 17,397.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,456 பங்குகள் ஏற்றத்திலும், 409 பங்குகள் சரிவிலும், 122 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளை பொருத்தவரையில் எதுவும் பெரியளவில் மாற்றம் காணவில்லை. எனினும் பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்திலும், மற்றவை பச்சை நிறத்திலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், ஈச்சர் மோட்டார்ஸ், விப்ரோ, சிப்லா, கிரசிம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஓஎன்ஜிசி, ஐஓசி, பிரிட்டானியா, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், இந்தஸிந்த் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், என்.டி.பி.சி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
ரூபாய் நிலவரம்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடக்கத்தில் பெரியளவில் மாற்றமின்றி, 73.03 ரூபாயாக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் 73.01 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
இது சந்தையில் தொடர்ந்து பையிங் டிரெண்ட் காணப்படும் நிலையில், தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதன் காரணமாக சந்தை தொடர் ஏற்றத்தில் காணப்படுகிறது. இதனையடுத்து ரூபாயின் மதிப்பும் கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வருகின்றது.
சந்தை தொடர்ந்து புதிய உச்சம்
இந்திய சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வரும் நிலையில், இன்றும் தொடக்கத்தில் புதிய உச்சத்தில் தான் தொடங்கியுள்ளது. எனினும் அந்த உச்சத்தினை தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் தொடக்கத்தில் 58,399 புள்ளிகளாக தொடங்கியிருந்தாலும், தற்போது சென்செக்ஸ் 195.98 புள்ளிகள் அதிகரித்து, 58,325.93 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 53.3 புள்ளிகள் அதிகரித்து, 17,376.90 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications