தொடர் ஏற்ற பாதையில் சென்செக்ஸ்.. 60,200-க்கு மேலாக வர்த்தகம்.. இன்று எப்படியிருக்கும்..!

இந்திய பங்கு சந்தையானது தொடர்ச்சியாக கடந்த சில அமர்வுகளாகவே வரலாற்று உச்சத்தினை கண்டு வருகின்றது. இது இன்று தொடர்ந்து இன்னும் ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுக்கும் ஒரு சிறப்பான முதலீடாகவும் மாறியுள்ளது.

நிபுணர்கள் இந்திய சந்தை எப்போதெல்லாம் சரிகின்றதோ அப்போதெல்லாம் முதலீடு செய்யலாம். ஏனெனில் சந்தையானது ஏற்றம் காணும் என்று நிபுணர்கள் கூறினர். அதனை போலவே தொடர்ந்து சந்தை ஏற்றம் கண்டு வருகின்றது.

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் வரலாற்று உச்சத்தினை தொட்ட நிலையில், ஆசிய சந்தைகள் பலவும் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது. இதனையடுத்து இந்திய பங்கு சந்தைகளும் இன்று தொடக்கத்திலேயே ஏற்றத்தில் தான் காணப்பட்டது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 273.22 புள்ளிகள் அதிகரித்து, 60,321.69 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 107.10 புள்ளிகள் அதிகரித்து, 17,960 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 244.48 புள்ளிகள் அதிகரித்து, 60,292.95 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 68.50 புள்ளிகள் அதிகரித்து, 17,921.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,430 பங்குகள் ஏற்றத்திலும், 459 பங்குகள் சரிவிலும், 130 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளில் பல குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே காணப்படுகின்றது. நிஃப்டி ஐடி, பிஎஸ்இ மிட்கேப், பிஎஸ்இ கேப் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்தேகேர், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்திலும், மற்றவை பச்சை நிறத்திலும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.சி.எல் டெக், விப்ரோ, டிவிஸ் லேப்ஸ், டெக் மகேந்திரா, சிப்லா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மாருதி சுசூகி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, எம்& எம், பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

ரூபாய் நிலவரம்

ரூபாய் நிலவரம்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, சற்று அதிகரித்து, 73.72 ரூபாயாக காணப்படுகின்றது.

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 176.59 புள்ளிகள் அதிகரித்து, 60,225.06 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 42.1 புள்ளிகள் அதிகரித்து, 17,895.30 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+