61,000 அருகில் சென்செக்ஸ், நிஃப்டி 18,100-க்கு மேல் வர்த்தகம்.. கவனிக்க வேண்டிய டிசிஎஸ், விப்ரோ..!

இந்திய பங்கு சந்தைகள் இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். குறிப்பாக சென்செக்ஸ் 61,000 புள்ளிகளுக்கு அருகிலும், நிஃப்டி 18,100 புள்ளிகளுக்கு மேலாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

ஒரு புறம் கொரோனாவின் தாக்கம் என்பது முதலீட்டாளர்களை அச்சுறுத்தி வந்தாலும், மறுபுறம் சர்வதேச சந்தைகளின் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.

சாதகமான காரணிகள்

சாதகமான காரணிகள்

தொடர்ந்து பரவி வரும் ஓமிக்ரான் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் இருந்தாலும், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க மத்திய வங்கி நடவடிக்கைகளை எடுக்கும் என்று மீண்டும் உறுதியளித்துள்ளார். இதன் மூலம் பொருளாதாரத்தினை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து அமெரிக்க சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. இதனையடுத்து இன்று ஆசிய சந்தைகள் அனைத்தும் தொடக்கத்திலேய் ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதனையடுத்து இந்திய சந்தையும் ஏற்றத்தில் தான் காணப்பட்டது.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இதற்கிடையில் இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இந்திய சந்தைகள் ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 480.34 புள்ளிகள் அதிகரித்து, 61,097.23 புள்ளிகளாகவும், நிஃப்டி 115.20 புள்ளிகள் அதிகரித்து, 17,171 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

தொடக்கத்தில் சென்செக்ஸ் 380.57 புள்ளிகள் அதிகரித்து, 60,997.46 புள்ளிகளாகவும், நிஃப்டி 111 புள்ளிகள் அதிகரித்து, 18,166.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1773 பங்குகள் ஏற்றத்திலும், 343 பங்குகள் சரிவிலும், 70 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ மெட்டல்ஸ் மட்டும் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது. மற்ற குறியீடுகள் அனைத்தும் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி, இந்தஸ்இந்த் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே டைட்டன் நிறுவனம், டிசிஎஸ், சிப்லா, யுபிஎல், டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டீஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸ்இந்த் வங்கி, ரிலையன்ஸ், கோடக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல டைட்டன் நிறுவனம், டிசிஎஸ், டெக் மகேந்திரா, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டீஸ், மாருதி சுசுகி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

தற்போது 9.56 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 361.23 புள்ளிகள் அதிகரித்து, 60,978.23 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 105.2 புள்ளிகள் அதிகரித்து, 18,160.95 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது. சென்செக்ஸ் தொடர்ந்து கிட்டதட்ட 61,000 புள்ளிகளுக்கு அருகில் காணப்படுகின்றது. நிஃப்டியும் தொடர்ந்து 18,100 மேலாக ஏற்றம் கண்டு வருகின்றது.

கவனிக்க வேண்டிய பங்குகள்

கவனிக்க வேண்டிய பங்குகள்

இதற்கிடையில் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகவுள்ளன. ஆக இந்த பங்குகளும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

இது தவிர இன்று இன்னும் பல நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் வெளியாகவுள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+