சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ், நிஃப்டி.. தற்போது நிலவரம் என்ன தெரியுமா?

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று, பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகின்றது.

கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தையானது சரிவிலேயே முடிவடைந்தது. இது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் மானிட்டரி கொள்கைகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்று கூறியதை அடுத்து சந்தைகள் சரிவினைக் கண்டு முடிவடைந்தன.

எனினும் ஆசிய சந்தைகள் பலவும் இன்று சரிவிலேயே தொடங்கியுள்ளன. அதன் எதிரொலி இந்திய சந்தையிலும் காணப்படுகின்றது.

தொடக்கம் எப்படி?

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 324.80 புள்ளிகள் குறைந்து, 57,360.02 புள்ளிகளாகவும், நிஃப்டி 160.20 புள்ளிகள் குறைந்து, 17,085.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 399.34 புள்ளிகள் குறைந்து, 57,285.48 புள்ளிகளாகவும், நிஃப்டி 117 புள்ளிகள் குறைந்து, 17,128.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 790 பங்குகள் ஏற்றத்திலும், 930 பங்குகள் சரிவிலும், 99 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் உள்ளிட்ட குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. நிஃப்டி பிஎஸ்இ , பிஎஸ்இ டெக், பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி,பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ ஸ்மால் கேப், நிஃப்டி ஐடி காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, கோல் இந்தியா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஓ.என்.ஜி.சி பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹீரோ மோட்டோகார்ப், பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, பிரிட்டானியா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், டாடா ஸ்டீல், என்.டி.பி.சி, கோடக் மகேந்திரா,அல்ட்ராடெக் சிமெண்ட், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாக உள்ளன. இதே கோடக் மகேந்திரா, டைட்டன் நிறுவனம், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்சி வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போது நிலவரம்

தற்போது நிலவரம்

தற்போது 10.32 மணி நிலவரப்படி, தொடக்கத்தில் சரிவில் தொடங்கிய சந்தையானது, தற்போது சென்செக்ஸ் 71.43 புள்ளிகள் குறைந்து, 57,613.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 19.1 புள்ளிகள் குறைந்து, 17,226.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் ஏற்ற இறக்கம் தொடரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+