700 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்.. நிஃப்டி 17,200க்கு அருகில் வர்த்தகம்..!

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

இது கடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் மீண்டும் ஏற்றம் கண்ட நிலையில், இன்று ஆசிய சந்தைகள் பலவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. எனினும் ஓமிக்ரான் வைரஸ் மீண்டும் லாக்டவுனுக்கு வழிவகுக்காது என்ற நம்பிக்கை அமெரிக்காவில் நிலவி வருகின்றது. இதற்கிடையில் தான் சந்தையானது ஏற்றத்தில் காணப்பட்டது.

எப்படியிருப்பினும் இந்திய சந்தையில் இன்றும் ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

கடந்த அமர்வில் அன்னிய முதலீடுகளானது சந்தையில் இருந்து 3,332.21 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு வெளியேற்றம் கண்டுள்ளது. இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 4,611.41 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 133.82 புள்ளிகள் அதிகரித்து, 57,394.40 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 203.20 புள்ளிகள் அதிகரித்து, 16,850.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 287.71 புள்ளிகள் அதிகரித்து, 57,548.29 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 84.10 புள்ளிகள் அதிகரித்து, 17,138.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1,329 பங்குகள் ஏற்றத்திலும், 506 பங்குகள் சரிவிலும், 85 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாகவும், மற்றவை 1% மேலாகவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், டாடா மோட்டார்ஸ், டெக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டிவிஸ் லேப் பங்கு டாப் லூசராகவும் உள்ளது.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், டாடா மோட்டார்ஸ், டெக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாக உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

தற்போது சென்செக்ஸ் 753.48 புள்ளிகள் அதிகரித்து, 58,014.06 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 222.95 புள்ளிகள் அதிகரித்து, 17,276.90 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

இன்றி ஐடி துறை சார்ந்த பங்குகள், ரியல் எஸ்டேட் பங்குகள், ஆட்டோமொபைல் துறை பங்குகள் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+