முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு.. இறுதி வர்த்தக நாளிலும் ஏற்றம் தான்..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் மீண்டும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்தில் தான் தொடங்கின. ஆக இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.

தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில அமர்வுகளாகவே ஏற்றம் கண்டு வந்த நிலையில், வார இறுதி வர்த்தக நாளாக இன்று மீடியம் டெர்ம் முதலீட்டாளர்களும், இன்ட்ராடே வர்த்தகர்களும் புராபிட் புக்கிங் செய்யலாம் என்ற நிலையில் சந்தையில் இன்று ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

குறிப்பாக வேகமாக நுகரப்படும் FMCG, ஐடி, மெட்டல்ஸ் உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் கவனிக்கப்படவேண்டிய பங்குகளாக உள்ளன. ஆக இன்று சந்தையில் செல்லிங் பிரஷர் அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. கடந்த அமர்வில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீட்டாளர்கள் 2818.90 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதுவே உள்நாட்டு முதலீட்டாளர்களும் இந்த சமயத்தில் 428.45 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இதுவும் சந்தையை சற்று தாக்கத்தினை ஏற்படுத்தும் என்ற நிலை இருந்து வருகிறது.

கொரோனா தாக்கம்

கொரோனா தாக்கம்

இரண்டாவது நாளாக இந்தியாவின் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கையானது, சற்று அதிகரித்துள்ளது எனலாம். தற்போது நாட்டில் வேகமாக கோரணா தடுப்பூசி விகிதமானது போடப்பட்டு வந்தாலும், தாக்கம் அதிகரித்து வருவது சற்று கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்றது. இது பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சற் ஏற்றத்தில் தான் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 122.14 புள்ளிகள் அதிகரித்து, 61,045.64 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 57.20 புள்ளிகள் அதிகரித்து, 18,235.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. தற்போது ஏற்றத்தில் காணப்பட்டாலும், ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ மெட்டல்ஸ், நிஃப்டி பிஎஸ்இ குறியீடுகள் சிவப்பு நிறத்திலும் காணப்படுகின்றது. பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் 1% மேலாகவும், மற்ற குறியீடுகள் 1% கீழாகவும் ஏற்றத்தில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பின்செர்வ், டைட்டன் நிறுவனம், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹிண்டால்கோ, கோல் இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பின்செர்வ், டைட்டன் நிறுவனம், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ் ,என்.டி.பி.சி, டாடா ஸ்டீல், ஐடிசி, ஹெச்.சி.எல் டெக் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போது என்ன நிலவரம்

தற்போது என்ன நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 288.79 புள்ளிகள் அதிகரித்து, 61,212.29 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 65.40 புள்ளிகள் அதிகரித்து, 18,243.50 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

இன்று வார இறுதி வர்த்தக நாள், அடுத்த வாரத்தில் வரவிருக்கும் எக்ஸ்பெய்ரி உள்ளிட்ட காரணிகளினால் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரிக்கலாம்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+