தொடரும் சரிவு.. சென்செக்ஸ் 490 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. நிஃப்டி 17,900 அருகில் வர்த்தகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் தொடர்ந்து சரிவில் காணப்படுகின்றன.

கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் சந்தைகள், மீண்டும் இன்று சரிவினைக் கண்டுள்ளன.

இது தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில் சரிவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வேதேச சந்தைகள் சரிவு

சர்வேதேச சந்தைகள் சரிவு

கடந்த அமர்வில் பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில் அமெரிக்க சந்தையானது சரிவில் காணப்பட்டது. இது நுகர்வோர் விலைக் குறியீடானது எதிர்பார்ப்பினை விட அதிகமாக வந்த நிலையில், இது மேற்கொண்டு டாலரின் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது சந்தையின் சரிவுக்கு காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக ஆசிய சந்தைகள் பலவும் சரிவில் காணப்படுகின்றன.

முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

பல சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் வரத்து என்பது தொட்ர்ந்து வெளியேறி வருகின்றது. நவம்பர் 10 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 469.50 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 766.95 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது சந்தையில் ஏற்படும் அதிக சரிவினை தடுத்துள்ளது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. சென்செக்ஸ் 13.85 புள்ளிகள் அதிகரித்து, 60,366.67 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 85.70 புள்ளிகள் குறைந்து, 17,931.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து தொடக்கத்தில் சற்று சரிவில் தான் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 188.38 புள்ளிகள் குறைந்து, 60,164.44 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 63.40 புள்ளிகள் குறைந்து, 17,953.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,087 பங்குகள் அதிகரித்தும், 645 பங்குகள் சரிவிலும், 110 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்


இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ டெக், நிஃப்டி ஐடி குறியீடுகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன. இதே பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் பிஎஸ்இ மெட்டல்ஸ் தவிர மற்றவை 1% கீழாக சரிவினைக் கண்டுள்ளன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள லார்சன், டைட்டன் நிறுவனம், கிரசிம், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஐஓசி, ஓ.என்.ஜி.சி, டெக் மகேந்திரா, பிபிசிஎல், ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன், டைட்டன் நிறுவனம், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டெக் மகேந்திரா, ஹெச்.டி.எஃப்.சி, இன்ஃபோசிஸ், பஜாஜ் பின்செர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சந்தையில் தற்போதைய நிலவரம்

சந்தையில் தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 491.02 புள்ளிகள் குறைந்து, 59,861.80 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 150.20 புள்ளிகள் குறைந்து, 17,867 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Opening bell: sensex was down 491.02 points at 59,861.80, nifty trade below 17,900

Market update.. sensex was down 491.02 points at 59,861.80, and nifty was down 150.20 points at 17,867./..!
Story first published: Thursday, November 11, 2021, 10:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X