ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனம் தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் துணைக்கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும் கடந்த 25 ஆண்டுகளாக நோக்கியா மற்றும் சாம்சங் போன்ற பிரபல பிராண்டுகளின் மொபைல் போன்களை விநியோகிப்பதில் முதன்மையாக ஈடுபட்டுள்ளது. பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் பங்கின் விலை 10 சதவீதம் அப்பர் சர்க்கியூட் அடித்து ரூ.491.50ஐ எட்டியது.
பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மீ, தனது இயர்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் டேப்லெட்டுகள் உள்ளிட்ட அடுத்த தலைமுறை AIoT சாதனங்களை இந்தியாவில் தயாரிக்க ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்து இருந்தது. இதன் எதிரொலியாகத்தான் இன்று பங்குச் சந்தையில் ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் பங்கின் அப்பர் சர்க்கியூட் அடித்தது.

இந்த இரண்டு நிறுவனங்களும் ஆண்டுதோறும் 50 லட்சம் AIoT சாதனங்களை உற்பத்தி செய்வதையும், இந்தியாவில் 2,000க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளன. ரியல்மீ பட்ஸ் டி200 லைட் உற்பத்தி ஏற்கனவே தொடங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 2,750 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலத்தில் ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவன பங்கின் விலை ரூ.17.15-லிருந்து இன்றை அப்பர் சர்க்கியூட் விலையான ரூ.491.50ஆக உயர்ந்துள்ளது.
2024 செப்டம்பர் 26ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.873.65ஐ எட்டியது. இதனையடுத்து முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்ய தொடங்கியதால் பங்கின் விலை தொடர்ந்து பல மாதங்களாக சரிவு கண்டது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 7.03 சதவீதம் உயர்ந்து ரூ.478.25ல் முடிவுற்றது. இப்பங்கு தற்போது அதன் 52 வார உச்ச விலையை காட்டிலும் 45 சதவீதம் குறைவாக உள்ளது.
ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனம் 2024 டிசம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.472 கோடி ஈட்டியுள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 2 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.482 கோடி ஈட்டியிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் ஆப்டிமஸ் இன்ஃப்ராகாம் நிறுவனம் நிகர லாபமாக ரூ.15 கோடி ஈட்டியது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் சுமார் 17 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.18 கோடி ஈட்டியிருந்தது.
தோனியின் ஆட்டத்தால் கல்லா கட்டும் எல்ஐசி.. CSK-வால் 500 சதவீதம் லாபம் பார்த்த LIC.. எப்படி தெரியுமா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications