நம்பிக்கை, இது தான் பங்குச்சந்தை முதலீடுகளுக்கு அடிப்படை. இதெல்லாம் பேச நல்லா தான் இருக்கும் என நீங்கள் கூறலாம். ஆனால் சரியான கணக்கீடும், சரியான தேர்வும், பொறுமையும் இருந்தால் உங்கள் முதலீடு பல மடங்கு உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஒரு நிறுவனம் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையில் நாம் வாங்கி போடும் பங்கு பின்னாளில் நல்ல வளர்ச்சி அடைந்து நமக்கு லாபத்தை அளிக்கின்றன. இப்படி முதலீட்டாளர் வைக்கும் நம்பிக்கைக்கு பரிசாக நிறுவனங்கள் அளிப்பவை தான் டிவிடெண்ட், போனஸ் பங்குகளை வழங்குவது, பங்குகளை பிரிப்பது, பங்குகளை திரும்ப வாங்குவது போன்றவை.

அப்படி தங்களை நம்பிய முதலீட்டாளர்களுக்கு 490% லாபம் தந்திருக்கிறது குஜராத்தை சேர்ந்த ரீடெய்ல் நிறுவனம்.
ஓசியா ஹைபர் ரீடெய்ல்: Osia Hyper Retail - ஓசியா ஹைபர் ரீடெய்ல் நிறுவனம், குஜராத்தில் 40க்கும் அதிகமான இடங்களில் மிகப்பெரிய கடைகளை வைத்து நடத்தி வருகிறது. மளிகை சாமான்கள், காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள், துணிமணிகள் என இங்கு கிடைக்காத பொருட்களே கிடையாது. நம் வீட்டிற்கு தேவையான அனைத்துமே இங்கே கிடைக்கும். இந்த ரீடெய்ல் ஸ்டோர்கள் குஜராத்தில் அசுர வளர்ச்சியை கண்டு வருகின்றன.
2019இல் வெளியிடப்பட்ட ஐபிஓ: ஓசியா ஹைபர் ரீடெய்ல் நிறுவனம் முதன்முதலாக கடந்த 2019 மார்ச் 26இல் ஐபிஓ அறிவித்தது. அப்போது NSEயில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ₹252 என நிர்ணயிக்கப்பட்டது. ஒரு லாட்டில் 400 பங்குகள் வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதாவது ஒரு லாட்டின் விலை 400*252 = ரூ.1,00,800 ஆகும்.
பின்னர் ஏப்ரல் 5இல் தேசிய பங்குச்சந்தையில் லிஸ்டான போது ₹255 என இருந்தது. நிறுவனம் அறிவித்ததை விட ஒரு பங்கின் விலை 3 ரூபாய் மட்டுமே உயர்ந்திருந்தது. முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்த்த லாபம் இல்லையென்றாலும், நீண்ட கால முதலீடாக வைத்திருந்தவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.
போனஸ் மற்றும் பங்கு பிரிப்பில் ஜாக்பாட்: சிறிது காலத்திற்கு பின் ஓசியா ஹைபர் ரீடெய்ல் நிறுவனம் 3:5 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கியது. அதாவது முதலில் 400 பங்குகள் கொண்ட ஒரு லாட்டினை வாங்கி இருந்தவர்களுக்கு பங்குகளின் எண்ணிக்கை 640 என உயர்ந்தது. ( [{(3+5)/5} x 400]
=640).
அதே போல 2023 மார்ச் மாதம் பங்குகள் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது அதாவது 1:10 என்ற விகிதத்தில் அளவிட்டு ஒரு பங்கினை 10 பங்குகளாக பிரித்தார்கள் , இதன் படி 640 பங்குகள் வைத்திருந்தவர்களுக்கு பங்குகளின் எண்ணிக்கை 6,400 என உயர்வு கண்டது.
இப்போது பங்கின் விலை என்ன?: ஓசியா ஹைபர் ரீடெய்ல் நிறுவனத்தின் பங்குகள் முன்னெப்போதும் இல்லாத அளவு ஜனவரி 30 அன்று தேசிய பங்குச்சந்தையில் ஒரு பங்கின் விலை ரூ.69.55 என புதிய உச்சத்தை அடைந்தது. ஒரு வேளை ஐபிஓ வெளியிட்ட போது 1,00,800 ரூபாய் முதலீடு செய்து அதை அப்படியே விட்டுவிட்டவர்களுக்கு பங்குகளின் எண்ணிக்கை 6,400ஆக உயர்ந்திருக்கும் லாபத்துடன் சேர்த்து முதலீடு ரூ.4.9 லட்சம் என அதிகரித்திருக்கும்.
3 ஆண்டுகளில் 490% லாபம்: கடந்த ஒரு வார காலத்தில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10.32% அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் 38.90% என்ற அளவிலும், ஓராண்டில் 179.81 % என்ற அளவிலும் உயர்ந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 490% லாபம் தந்துள்ளது.
தற்போது குஜராத்தில் கடைகளை வைத்திருக்கும் இந்நிறுவனம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ராவிலும் கடைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அண்மையில் இந்நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு விகிதம் 4.85%இல் இருந்து 11.13% என உயர்வு கண்டது. நிறுவன புரமோட்டர்கள் தங்களது பங்கினை 58.18%இல் இருந்து 50.79%ஆக குறைத்துக் கொண்டனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications