முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை முதலீட்டை அதிகரித்து வருவது மற்றும் சாதகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்கள் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் தற்போது புதிய உச்சத்தில் உள்ளன. பல முன்னணி நிறுவன பங்குகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
இருப்பினும் ஒரு ஸ்மால் கேப் நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. அந்த நிறுவன பங்கு குறுகிய காலத்தில் மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக கடந்த ஒராண்டு காலத்தில் அந்த பங்கு முதலீட்டாளர்களுக்கு 150 சதவீதத்துக்கு மேல் ஆதாயம் அளித்துள்ளது. அந்த மல்டிபேக்கர் பங்கு பாரமவுண்ட் கம்யூனிகேஷன்ஸ்.

பாரமவுண்ட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பைபர் ஆப்டிக் கேபிள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு அண்மையில் அதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ளது.
கடந்த சில காலாண்டுகளாக இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக உள்ளது. 2023 ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.210.54 கோடியும், நிகர லாபமாக ரூ.14.53 கோடியும் ஈட்டியிருந்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.250.28 கோடியாகவும், நிகர லாபம் ரூ.19.45 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் இப்பங்கின் விலை ரூ.36லிருந்து ரூ.98.50ஆக உயர்ந்துள்ளது. இந்த காலத்தில் இப்பங்கின் விலை 150 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. அதேசமயம் கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் 700 சதவீதம் ஆதாயம் வழங்கியுள்ளது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த 5ம் தேதியன்று வர்த்தகத்தின் இடையே பாரமவுண்ட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.98.50ஐ எட்டியது. தற்போது இப்பங்கின் விலை 52 வார உயர்வுக்கு அருகில் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இப்பங்கின் ரூ.91.95ஆக உள்ளது.
இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2,569 கோடியாக உள்ளது. பைபர் ஆப்டிக் கேபிள் தயாரிப்பு துறையில் வலுவான போட்டி இருந்தாலும் இந்நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் நல்ல ஆதாயம் கொடுத்த இந்த மல்டிபேக்கர் பங்கு மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்கு மீது எப்போதும் கொஞ்சம் கவனம் வைப்பது நல்லது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications