இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்தது. ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் தாக்கி கொண்டன. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து டாலர் வலுவடைந்ததால் இந்திய பங்குச்சந்தை சரிந்தது.
நிஃப்டி, சென்செக்ஸ் ஆகியவற்றில் பெரும்பாலான நிறுவன பங்குகள் சிவப்பாகவே காட்சி தந்த நிலையில் ஒரு நிறுவனத்தின் பங்கு மட்டும் 6% உயர்ந்து முதலீட்டாளர்களை கொண்டாட வைத்தது. நகை விற்பனையில் ஈடுபட்டு வரும் அந்த நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. இதன் காரணமாக நிறுவன பங்கு உயர்வு கண்டது.

இந்தியாவில் நகை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் முக்கியமானது பி.சி. ஜூவல்லர் (PC Jeweller). இந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 6% வரை உயர்ந்தன. பி.சி. ஜூவல்லர் நிறுவனம், தனது கடன் சுமையை குறைப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டி இருப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றது.
நீண்ட காலமாக நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த பி.சி. ஜூவல்லர் நிறுவனம், தற்போது படிப்படியாக தன்னை மீட்டு கொண்டு வருகிறது. பி.சி. ஜூவல்லர் நிறுவனம், தங்களுக்குக் கடன் வழங்கியிருந்த 14 வங்கிகளில், இரண்டு வங்கிகளுடன் செய்து கொண்ட கடன் தீர்வு ஒப்பந்தத்தின்படி, நிலுவையில் இருந்த அனைத்து கடன்களையும் முழுமையாக திருப்பி செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் காலாண்டுக்குள் தனது நிறுவனத்தை முழுமையாக கடனில்லா நிறுவனமாக மாற்ற வேண்டும் என பி.சி. ஜூவல்லர்ஸ் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
அந்த இலக்கை எட்டும் வகையில் நிறுவனம் தொடர்ந்து தனது கடன்களை அடைத்து வருவதால், அதன் நிதி நிலைமை சீரடைந்து வருகிறது என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் இந்த பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இந்த நிறுவன பங்கின் விலை தற்போது 9.34 ரூபாயாக உள்ளது. இன்றைய நாள் வர்த்தகத்தில் 10 ரூபாய்க்கும் மேல் சென்றது. அந்த வகையில் நகை விற்பனை பிரிவில் இருக்கும் பென்னி ஸ்டாக் பங்கு இது. விரைவில் இது 15 ரூபாய் வரை கூட செல்லலாம் என ஏஞ்சல் ஒன் நிபுணர் ராஜேஷ் போல்ஸே கூறுகிறார்.
பொதுவாக, கடன் சுமை குறையும்போது ஒரு நிறுவனத்தின் லாபத்தன்மை அதிகரிக்கும் என்பது பங்குச்சந்தை விதி. அந்த வகையில் பி.சி. ஜூவல்லர் தனது கடன்களை அடைத்து வருவது, நீண்ட கால அடிப்படையில் அந்த நிறுவனத்தின் செயல்பாட்டு திறனை மேம்படுத்த உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டு முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த 21% உயர்ந்துள்ளது, விரைவில் இது கடனில்லா நிறுவனமாக மாறினால் அதன் வருவாய் மற்றும் லாபம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2021ஆம் ஆண்டில் வெறும் 2.58 ரூபாயாக இருந்த இதன் பங்கு மதிப்பு 5 ஆண்டுகளில் 265% உயர்ந்து 10 ரூபாய் என்ற அளவை எட்டி இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

