இந்திய பங்கு சந்தையில் பெரிய நிறுவனங்களின் பங்குகள் மட்டுமின்றி, மிக குறைந்த விலையில் இருக்கும் பென்னி பங்குகளும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக நகை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் பங்கு தான் இன்று பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ஒரு பங்காக உள்ளது.
பிசி ஜூவல்லர் லிமிடெட் (PC jeweller ltd) வட இந்தியாவில் தங்க நகை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம். இதன் ஒரு பங்கு மதிப்பு 10 ரூபாய் தான். இந்நிறுவன பங்கு மதிப்பு 2020இல் வெறும் 2 ரூபாயாக தான் இருந்தது. 5 ஆண்டுகளில் இது 10 ரூபாய் என்ற மதிப்பை எட்டியுள்ளது.

இந்த பங்கு கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும் 9% உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் 31.3% வரை இது வளர்ச்சி அடைந்துள்ளது. 5 ஆண்டுகளில் 300%க்கும் மேல் வளர்ச்சி கண்டு மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது. இந்றுவன சந்தை மூலதன மதிப்பு 8,510 கோடி ரூபாய் ஆகும். இந்த பங்கின் 52 வார கால உச்சபட்ச மதிப்பு 15 ரூபாய் ஆகும்.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு தங்கம், வெள்ளி , வைர நகைகளை விற்பனை செய்யும் இந்நிறுவனம். பிசி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்கு இன்றைய தினம் கவனம் பெறுவதற்கு முக்கிய காரணம் இந்த நிறுவனம் தங்களுக்கு நிலுவையில் இருந்த அனைத்து கடன்களையும் செலுத்திவிட்டதாக வெளியிட்ட ஒரு அறிவிப்பு தான். அந்த வகையில் தற்போது கடன் இல்லாத நிறுவனமாக பிசி ஜுவல்லர்ஸ் மாறி இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் பங்குகளில் 49 % சில்லறை முதலீட்டாளர்கள் வசமும் 37 % பிரமோட்டர்கள் வசமும் இருக்கிறது. உள்நாட்டு நிதி நிறுவனங்கள் 6.9 % பங்குகளை கொண்டிருக்கின்றன வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 6.3 % பங்குகளை தங்கள் வசம் வைத்திருக்கின்றன. நிறுவனத்தின் நிதி நிலைமை பார்க்கும்போது கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 2372 கோடி ரூபாய் வருமானமும் 578 கோடி ரூபாய் லாபத்தையும் ஈட்டி இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 190 % அதிகமாகும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

