டிரான்ஸ்ஜீன் பயோடெக் லிமிடெட் பயோடெக்னாலஜி துறையை சார்ந்த ஒரு நிறுவனம். இந்நிறுவனம் தடுப்பூசிகள், புற்றுநோயியல் மற்றும் புதிய மருந்து விநியோக தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
டிரான்ஸ்ஜீன் பயோடெக் லிமிடெட் ஒரு மைக்ரோ கேப் பங்கு. இதன் பங்கின் விலை ரூ.5க்கும் குறைவாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகம் முடிவடைந்தபோது டிரான்ஸ்ஜீன் பயோடெக் லிமிடெட் பங்கின் விலை ரூ.4.44ஆக இருந்தது.

டிரான்ஸ்ஜீன் பயோடெக் லிமிடெட் பங்கு விலை கடந்த 52 வாரத்தில் குறைந்தபட்சமாக ரூ.2.28 வரை சென்றது, அதிகபட்சமாக ரூ.5.09ஐ தொட்டது. இதுதவிர இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சொல்லி கொள்ளும்படி சிறப்பாக இல்லை. கடந்த ஜூன் காலாண்டில் டிரான்ஸ்ஜீன் பயோடெக் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.13.15 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
என்னதான் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் இல்லாவிட்டாலும் நாம் அந்த நிறுவனத்தை அசால்டாக புறந்தள்ளி விட முடியாது. ஏனென்றால் தற்போது டிரான்ஸ்ஜீன் பயோடெக் நிறுவனம் தொடர்பாக வந்துள்ள செய்தி அப்படி ஒரு செய்தி.
டிரான்ஸ்ஜீன் பயோடெக் நிறுவனம், ஊசி வாயிலாக உடம்பில் இன்சுலின் செலுத்துவதற்கு பதிலாக, வாய் மற்றும் நாசி வழியாக இன்சுலின் செலுத்தும் இன்சுலின் டெலிவரி தொழில்நுட்பத்தை புதுப்பிக்கவும், மேம்படுத்தவும் நீட்ல்ஃப்ரீ டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இந்த அற்புதமான தொழில்நுட்பம் சர்க்கரை நோயாளிகள் தங்கள் நிலையை நிர்வகிக்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. மேலும் வலி மிகுந்த ஊசி மருந்துகளின் தேவையை நீக்கும்.
டிரான்ஸ்ஜீன் பயோடெக் லிமிடெட் நிறுவனத்தின் வாய் மற்றும் நாசி வழியாக இன்சுலின் செலுத்தும் இன்சுலின் டெலிவரி தொழில்நுட்ப முயற்சி வெற்றியடைந்தால், அது நிறுவனத்துக்கு பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer
This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications