ஒரு பங்கு விலை வெறும் ரூ.5.. 6 மாதத்தில் 31 சதவீத லாபம்.. இப்படியும் சில பங்குகள்..!

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விகாஸ் எக்கோடெக் லிமிடெட் நிறுவனம் சிறப்பு ரசாயனங்கள் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் தொழில்களுக்கான சிறப்பு பாலிமர்கள், சிறப்பு சேர்க்கைகள் மற்றும் ரசாயனங்கள் உற்பத்தி மற்றும் வர்த்தகம் செய்து வருகிறது.

இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் விவசாயம், உள்கட்டமைப்பு, பேக்கேஜிங், மின்சாரம்,காலணிகள், மருந்துகள், வாகனம் மற்றும் மருத்துவ சாதனங்கள் உள்பட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ரூ.5க்கு கீழ் உள்ள பென்னி ஸ்டாக்கான இந்நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒரு பங்கு விலை வெறும் ரூ.5.. 6 மாதத்தில் 31 சதவீத லாபம்.. இப்படியும் சில பங்குகள்..!

2022-23ம் நிதியாண்டில் விகாஸ் எக்கோடெக் லிமிடெட் நிறுவனம் நிகர லாபமாக ரூ.9.53 கோடி ஈட்டியுள்ளது. மேலும் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.1.55 கோடியும், கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.1.77 கோடியும் நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

வலுவான நிதி நிலை முடிவுகளை கொண்டுள்ள இந்நிறுவனம் தற்போது தனது கடனை படிப்படியாக குறைத்து கடன் இல்லாத நிறுவனமாக மாறுவதற்காக நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக, முன்பு ரூ.161.2 கோடியாக இருந்த கடன் தற்போது வெறும் ரூ.4.25 கோடியாக குறைந்துள்ளது. இது இந்நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் கடனற்ற எதிர்காலத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.

இந்த சூழ்நிலையில், பலேஷ்வர் காரக்பூர் எக்ஸ்பிரஸ்வே லிமிடெட் நிறுவனத்தில் ஐஎல் & எஃப்எஸ் குழுமம் வைத்துள்ள பங்குகளையும், ஷேம்லி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை அதன் தற்போதைய பங்குதாரர்களிடமிருந்து ஒரு பங்கு பரிமாற்ற ஒப்பந்தத்தில் பங்குகளையும் வாங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், நேற்று நடைபெற்ற விகாஸ் எக்கோடெக் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில், மேற்கண்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் பரிந்துரைக்கு இயக்குனர்கள் ஒப்புதல் அளித்தது.

பலேஷ்வர் காரக்பூர் எக்ஸ்பிரஸ்வே லிமிடெட் நிறுவனம் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுமான துறையை சேர்ந்த நிறுவனமாகும். அதேசமயம் ஷேம்லி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெர்மோ மெக்கானிக்கல் பார்கள் மற்றம் அரிப்பை எதிர்க்கும் ஸ்டீல் பார்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது.

இருவேறு துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளை விகாஸ் எக்கோடெக் லிமிடெட் நிறுவன வாங்க இருப்பது இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை பல்வகைப்படுத்தும் மற்றும் நிறுவனத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அழைத்து செல்லும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்நிறுவனம் வலுவான வர்த்தக ஆர்டர்களை கொண்டுள்ளது. அலர்ட் இந்தியா, கேப்ஸ்டன் ரப்பர் மற்றும் பாலிகேப் இந்தியா போன்ற முன்னணி வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.22.5 கோடி மதிப்பிலான ஆர்டர்களை கொண்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த சனிக்கிழமையன்று விகாஸ் எக்கோ லிமிடெட் நிறுவன பங்கின் விலை ரூ.4.06ல் முடிவுற்றது. 2023 மே 28ம் தேதியன்று இந்நிறுவன பங்கு 52 வார குறைந்தபட்சமாக ரூ.2.38ஐ எட்டியது. அது முதல் இதுவரையிலான காலத்தில் இந்த மைக்ரோ கேப் பங்கு விலை 70 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+