பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் நிறுவனம், இந்தியாவில் நுகர்வோர் எலக்ட்ரானிக் சாதனங்களின் அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கான எலக்ட்ரானிக் உற்பத்தி சேவைகள் வழங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும், இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களால் அதிகம் விரும்பப்படும் பங்குகளில் ஒன்றாக இந்நிறுவன பங்கு உள்ளது.
மல்டிபேக்கர் பங்கு
கடந்த ஏப்ரல் முதல் நடப்பு மே மாதத்தில் இதுவரையிலான காலத்தில் இந்நிறுவன பங்கு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை 2 சதவீதம் குறைந்தது. நடப்பு மே மாதத்தில் இதுவரை இப்பங்கின் விலை 8 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த ஒராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 300 சதவீதத்துக்கு மேல் லாபத்தை கொடுத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் நிறுவன பங்கின் விலை 22,611 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 1,004 சதவீதம் பெருக்கியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதியன்று பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,054.95ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
பங்கின் விலை
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் பங்கு விலை 5 சதவீதத்துக்கு மேல் குறைந்து ரூ.786.35க்கு சென்றது. நேற்று இப்பங்கின் விலை 2 சதவீதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2 வர்த்தக தினங்களாக இப்பங்கின் விலை சரிவு கண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.65 சதவீதம் குறைந்து ரூ.799.35ஆக இருந்தது.
பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் பங்கின் விலை இறங்குமுகத்தில் இருந்தாலும் பங்குச் சந்தை நிபுணர்கள் பார்வையில் இந்நிறுவன பங்கு பாசிட்டிவாக உள்ளது. ஆனந்த் ரதி ஷேர் அண்ட் ஸ்டாக் புரோக்கர்ஸின் ஈக்விட்டி ரிசர்ச்சின் மூத்த மேலாளர் ஜிகர் எஸ் படேல் கூறுகையில், பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் ஊக்கமளிக்கும் தொழில்நுட்ப அறிகுறிகளை காட்டியுள்ளது. இது ஒரு முக்கிய ஆதரவு மண்டலத்திற்கு அருகில் ஒரு ஏற்ற இறக்கமான வடிவத்தை உருவாக்குகிறது.
கணிப்பு
இது பொதுவாக ஒரு சரிவு போக்கிலிருந்து சாத்தியமான தலைகீழ் மாற்றத்தை குறிக்கிறது என்று தெரிவித்தார். சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் மந்தர் போஜனே கூறுகையில், பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் பங்கு விலை ரூ.860க்கு மேல் முடிவடைந்தால், இப்பங்கின் விலை ரூ.920 மற்றும் ரூ.960ஐ நோக்கி மேல்நோக்கி செல்லும் என்று தெரிவித்தார்.
மே 12 ரிசல்ட்
பிஜி எலக்ட்ரோபிளாஸ்ட் நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவை வரும் திங்கட்கிழமை (மே 12) வெளியிட உள்ளது. இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் நிபுணர்களின் எதிர்பார்ப்பை காட்டிலும் சிறப்பாக இருந்தால், இந்நிறுவன பங்கின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு என்ட் கார்டு போட இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. எகிறிய பாதுகாப்பு துறை பங்குகள் விலை
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications