பொதுவாக நாம் முதலீட்டு பயணங்களை ஆர்வத்துடன் தொடங்கும்போது, அது நம்மை சேமிக்கவும் முதலீடு செய்யவும் போதுமான அளவு சம்பாதிக்க ஊக்கப்படுத்துகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் முதலீட்டுக்கான சிறந்த இடம் அல்லது வாய்ப்பாக பங்கு சந்தை உள்ளது.
சமீபகாலமாக பங்குச் சந்தையில் மக்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. பங்குச் சந்தைகளில் கடந்த 3 ஆண்டுகளில் பதிவு செய்த முதலீட்டாளர்களில் 83 சதவீதம் பேர் 40 வயதிற்குட்டபவர்கள். இது அனைத்து சந்தை பங்கேற்பாளர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதமாகும். இதில் பெரும்பான்மையானவர்கள் 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் நேரடியாக பங்குகளில் முதலீடு செய்ய முடியாது. டீமேட் கணக்கை தொடங்கி பங்கு தரகரிடம் (share broking companies) அவர்களின் செயலிகள் போன்றவற்றின் வாயிலாகத் தான் முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்ய முடியும்.
நம் நாட்டில் தற்போது நூற்றுக்கணக்கான share broking நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இத்துறையில் பல முன்னணி நிறுவனங்கள் உடன் போட்டிப்போடவும் தனது வாடிக்கையாளர் பலத்தை வைத்து வேகமாக இத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் முடிவுடன் போன்பே நிறுவனம் share broking வர்த்தகத்தில் களம் இறங்கியுள்ளது.
போன்பே நிறுவனம் PhonePe Wealth Broking என்ற தனது துணை நிறுவனத்தின் வாயிலாக share broking வர்த்தகத்தில் களம் இறங்கியுள்ளது. PhonePe Wealth Broking நிறுவனம் புதிதாக ஷேர் டாட் மார்க்கெட் (Share.Market) என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.
இந்த Share.Market ஆப் மூலம் மக்களுக்கு பங்குகள், மியூச்சுவல் பண்ட் போன்றவற்றை வாங்க மற்றும் விற்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்நிறுவனம் சந்தை நுண்ணறிவு, ஆராய்ச்சி அடிப்படையிலான வெல்த்பேஸ்கட்ஸ், தொழில்நுட்ப தளம், முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதன் மூலம் பங்கு தரகு சேவையை உயர்த்துகிறது.
Wealth Baskets பரிவர்த்தனைகளில் பூஜ்ய ப்ளாட்பார்ம் கட்டணம் மற்றும் பூஜ்ய தரகை Share.Market வழங்குகிறது. இந்த சலுகைகள் 2024 மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது. புதிய வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் , ஈக்விட்டி டெலிவரி மற்றும் ஈக்விட்டி இன்ட்ராடே வர்த்தகத்திற்கான தரகு கட்டணமாக 0.05 சதவீதம் அல்லது நிறைவேற்றப்பட்ட ஆர்டருக்கு ரூ.20 மட்டுமே விதிக்கப்படுகிறது. மேலும் onboarding கட்டணமான ரூ.199 ரத்து செய்துள்ளது.
Share.Market-ன் தலைமை செயல் அதிகாரி உஜ்வால் ஜெயின் கூறுகையில், Share.Market அறிமுகம் முதலீட்டாளர்கள் சமூகத்தில் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. ஆன்போர்டிங் கட்டணங்களை நீக்கியதன் மூலம் முதலீட்டு உலகில் முதலீட்டாளர்கள் விரைவாக நுழைவதற்கு தடையாக இருந்ததை நீக்கி, Share.Market இப்போது அணுகக்கூடியதாக உள்ளது.
எங்களது தளத்தில் கூடுதல் தயாரிப்புகளை படிப்படியாக அறிமுகப்படுத்துகிறோம். WealthBaskets-ல் பூஜ்ய தரகுக்கான எங்கள் அர்ப்பணிப்பு 2024 மார்ச் வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications