பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான பொரின்ஜூ வெளியத் ஒரு நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளார் என்ற தகவல் வெளியான அடுத்த நிமிடமே அந்த நிறுவன பங்கு லைம் லைட்டுக்கு வந்து விடும்.
ஏனென்றால் அவரை பின்பற்றி பல சில்லரை முதலீட்டாளர்கள் அந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்வர். தற்போது கேரள ஆயுர்வேதா நிறுவனத்தில் பொரின்ஜூ வெளியத் தனது பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ள தகவல் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள ஆயுர்வேதா (Kerala Ayurveda) நிறுவனம் மருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. நடப்பு 2023-24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் (2023 ஏப்ரல்-செப்டம்பர்) இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 16 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.51.48 கோடியாக அதிகரித்துள்ளது.
மேலும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகம் 16 சதவீதம் உயர்ந்துள்ளது. 2023 நவம்பர் 14ம் தேதியன்று பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், தனது ஆயுர்வேதகிராம் பாலி வருவாயை ஒருங்கிணைக்க அதன் 50:50 கூட்டு வர்த்தகத்தை மறுகட்டமைக்கும் பணியில் இருப்பதாக தெரிவித்தது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த திங்கட்கிழமையன்று கேரள ஆயுர்வேதா நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உயர்வான ரூ.329.75ஐ எட்டியது. மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.312.35ஆக இருந்தது.
ஸ்மால்கேப் பங்கான இந்நிறுவன பங்கு கடந்த ஓராண்டில் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது. கடந்த 12 மாதங்களில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 200 சதவீதத்துக்கு மேல் லாபம் கொடுத்துள்ளது.
பிரபல மற்றும் முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளரான பொரின்ஜூ வெளியத் இந்த ஸ்மால்கேப் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த டிசம்பர் காலாண்டில் மேலும் 1.64 சதவீத பங்குகளை வாங்கி உள்ளார்.
கடந்த செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, அந்நிறுவனத்தில் அவர் 3.18 சதவீத பங்கு மூலதனத்தை வைத்து இருந்தார். கடந்த டிசம்பர் காலாண்டில் கூடுதல் பங்குகளை வாங்கியதையடுத்து கேரள ஆயுர்வேதா நிறுவனத்தில் பொரின்ஜூ வெளியத்தின் பங்கு மூலதனம் 4.82 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனத்தில் அவர் வைத்திருக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு ரூ.17 கோடியாகும். இந்த நிறுவனத்தில் அவர் தொடர்ந்து தனது பங்கு மூலதனத்தை அதிகரித்து வருவது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
கேரள ஆயுர்வேதா நிறுவனத்தை தவிர்த்து, பிஜி பாயில்ஸ், சென்டம் எலக்ட்ரானிக்ஸ், காயா, மேக்ஸ் இந்தியா, ஷாலிமார் பெயிண்ட்ஸ் மற்றும் சிங்கர் இந்தியா உள்பட 14 நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளார். இந்த பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.219.2 கோடியாகும் என புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications