பங்குச் சந்தையில் ஒரு நல்ல நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்தால் கூட நல்ல ஆதாயம் சம்பாதிக்கலாம். அதற்கு உதாரணமாக பிரவேக் லிமிடெட் பங்கை குறிப்பிடலாம். பிரவேக் லிமிடெட் நிறுவனம் கண்காட்சி மேலாண்மை, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட பன்முக துறைகளில் சேவை வழங்கும் நிறுவனமாகும். தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் மற்றும் பங்குச் சந்தையில் குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் கொடுத்த ஸ்மால்கேப் பங்குகளில் இதுவும் ஒன்று. பிரவேக் லிமிடெட் பங்குகள் கடந்த 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 30.000 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்பு பிரவேக் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை வெறும் ரூ.2.35 என்ற அளவில் வர்த்தகம் ஆனது. ஆனால் தற்போது இப்பங்கு ரூ.703 என்ற அளவில் உள்ளது. அதாவது 5 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 29,814 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயம் கொடுத்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.3 கோடியாக உயர்ந்திருக்கும். 2019ம் ஆண்டில் இந்நிறுவன பங்கின் விலை 50 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் இப்பங்கு விலை முறையே 1,086 மற்றும் 210 சதவீதம் உயர்ந்தது.

2022ம் ஆண்டில் பிரவேக் பங்கு முதலீட்டாளர்களுக்கு 79 சதவீதம் ஆதாயம் கொடுத்தது. 2023ம் ஆண்டில் இப்பங்கு விலை 166.70 சதவீதம் வளர்ச்சி கண்டது. கடந்த 2024 காலாண்டர் ஆண்டில் பிரவேக் பங்கு விலை 1 சதவீதம் சரிவு கண்டது. 2024 ஜனவரியில் இப்பங்கு தனது இதுவரை இல்லாத உச்சவிலையான ரூ.1,300ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது. அதனுடன் ஒப்பிடுகையில் இப்பங்கின் விலை 46 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், கடந்த 14ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் பிரவேக் பங்கு விலை 52 வார குறைந்த அளவாக ரூ.615.50க்கு சென்றது. அதன் பிறகு தற்போது பங்கு விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
இந்நிறுவனம் தொடக்கத்தில் ஒயிட் ரான் விழா மற்றும் வைப்ரன்ட் குஜராத் போன்ற அதிக மக்கள் வருகை தரும் நிகழ்ச்சிகளை வெற்றிகரமான நடத்தியதன் மூலம் பிரபலமானது. இந்நிறுவனம் சமீபத்தில் லட்சத்தீவின் பங்காரம் தீவில் தனது சொகுசு ரிசார்ட் செயல்பாட்டை தொடங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. பிரவேக் லிமிடெட் நிறுவனம் 2024 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1.43 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாயாக ரூ.23.69 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் வளர்ச்சி கண்டுள்ளது.
Story Written by: Subramanian
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications