ஆச்சரியம், அதிசயம் நிகழும் இடம் என்றால் அது பங்குச் சந்தை தான். ரிஸ்க் அதிகம் தான் ஆனால் நினைத்து பார்க்க முடியாத லாபத்தை பங்குகள் கொட்டி கொடுக்கும். ஒருவர் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்கும் பணத்தை பங்குகள் சில ஆண்டுகளிலேயே கொடுத்து விடும்.
அதற்கு உதாரணமாக பிரவேக் லிமிடெட் பங்கினை சொல்லலாம். இந்த பங்கு 5 ஆண்டுகளில் 500 அல்ல 1,000 அல்ல 54,000 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் இந்த பங்குகளில் சில ஆயிரங்கள் முதலீடு செய்து இருந்தால் இன்று பல லட்சங்களாக உயர்ந்திருக்கும்.

குஜராத்தை சேர்ந்த பிரவேக் லிமிடெட் நிறுவனம் கண்காட்சி மேலாண்மை, நிகழ்ச்சி மேலாண்மை, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் மற்றும் வெளியீடு போன்ற பல்வேறு வணிகபிரிவுகளில் வலுவான வர்த்தகத்தை கொண்டுள்ளது. அயோத்தி, ரான் ஆஃப் கட்ச், வாரணாசி, டாமன் அண்ட் டையூ மற்றும் சர்தார் சரோவாா உள்ளிட்ட பல இடங்களில் சொகுசு கூடார நகரங்கள் மற்றும் சொகுசு ஓய்வு விடுதிகளை போன்ற சேவைகளை வழங்குகிறது.
இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக உள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் பிரவேக் லிமிடெட் நிறுவனம் வருவாயாக ரூ.84.38 கோடியும், நிகர லாபமாக ரூ.28.38 கோடியும் ஈட்டியுள்ளது.
பிரவேக் லிமிடெட் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயத்தை கொடுத்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு 54,000 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த புதன்கிழமையன்று (10ம் தேதி) வர்த்தகத்தின் இடையே பிரவேக் லிமிடெட் நிறுவன பங்கு புதிய 52 வார உயர்வான ரூ.1,300.00 விலையை எட்டியது.
2019 ஜனவரியில் இப்பங்கின் விலை ரூ.2.40ஆக இருந்தது. அப்போது இந்நிறுவன பங்குகளில் ரூ.10,000 முதலீடு செய்து இருந்தால் இப்போது அது ரூ.54 லட்சமாக உயர்ந்திருக்கும். கடந்த ஓராண்டில் இப்பங்கு 330 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. 2024ல் இதுவரை இப்பங்கின் விலை 75 சதவீதம் உயர்ந்துள்ளது.
2023 டிசம்பரில், லட்சத்தீவின் அகத்தி தீவில் குறைந்தது 50 கூடாரங்களின் மேம்பாடு, செயல்பாடு, பராமரிப்பு மற்றும் மேலாண்மைக்கான பணி ஆணையை பெற்றுள்ளதாக பிரவேக் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தவிர்த்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா, 10வது வைப்ரண்ட் குஜராத் குளோபல் உச்சிமாநாடு 2024 மற்றும் லட்சத்தீவுகளுக்கான சமீபத்திய சுற்றுலா முன்மொழிவு ஆகிய நிகழ்வுகள் இந்நிறுவனத்துக்கு பெரிய பயனை அளிக்கும்.
இதனால் எதிர்காலத்தில் இந்நிறுவன பங்கு மேலும் ஏற்றம் காணும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரவேக் லிமிடெட் நிறுவன பங்கு விலை ரூ.1,129.85ல் முடிவுற்றது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2,580 கோடியாகும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications