ரிசர்வ் வங்கி இந்திய வங்கிகளில் குவிந்துக்கிடக்கும் வராக் கடன் களையும் விதமாகப் புதிய வரைமுறைகளை வெளிவிட்டது, இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக இருந்தது.
உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளால் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 85 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.

ஆனால் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் ஆர்பிஐயின் புதிய வரைமுறைகளின் தாக்கத்தின் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு மளமளவெனச் சரிவை சந்தித்தது.
இதனால் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 144.52 புள்ளிகள் சரிந்து 34,155.95 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 38.85 புள்ளிகள் குறைந்த 10,500.90 புள்ளிகளில் சரிவை தாக்குப்பிடித்தது.
புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் வங்கி குறியீடு 471 புள்ளிகள் சரிந்து 28,609.02 புள்ளிகளை அடைந்தது. வங்கித் துறையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 1.77 பில்லியன் டாலர் மோசடி இன்று வெளியான காரணத்தால் இவ்வங்கியின் பங்குகள் 9.81 சதவீதம் வரையில் சரிந்தது.


Click it and Unblock the Notifications