மும்பை: பிரபல முதலீட்டு நிறுவனமான பல்சர் இன்டர்நேஷனல் நிறுவனம் தங்களது பங்குகளை பிரிப்பதற்கான நிர்ணய தேதியை அறிவித்துள்ளது. பல்சர் இன்டர்நேஷனல் நிறுவனம் அண்மையில் தங்களது நிறுவனத்தின் ஈகிவிட்டி பங்குகளை 10:1 என்ற விகிதத்தில் பிரிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அண்மையில் இந்த நிறுவனத்தின் வாரிய இயக்குனர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நிறுவனத்தின் பங்குகளை பிரிப்பதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.
இதன்படி பல்சர் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் தற்போது உள்ள பத்து ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட ஒரு பங்கானது ஒரு ரூபாய் ஃபேஸ் வேல்யூ கொண்ட பத்து பங்குகளாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இந்த நிறுவனத்தில் ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு இனி அது 10 பங்குகளாக இருக்கும் என்பது இதன் அர்த்தமாகும்.

இந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி நிறுவனத்தின் வாரிய குழு இயக்குனர்கள் நடத்திய ஆலோசனையில் நிறுவனத்தின் பங்குகளை பிரிப்பதற்கான ஒப்புதல் பெறப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பங்கு பிரிப்புக்கான ரெக்கார்ட் டேட் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. பல்சர் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஒரு பங்கானது 10 ஆக பிரிக்கப்படுகிறது. இதற்கான முதலீட்டாளரின் தகுதியை நிர்ணயம் செய்யக்கூடிய தேதியாக ஏப்ரல் 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்த நிறுவனத்தின் பங்கு பிரிப்புக்கான முதலீட்டாளர்களின் தகுதி நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
பல்சர் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்கு மதிப்பானது கடந்த வெள்ளியன்று பங்குச்சந்தையில் ஒரு பங்கின் மதிப்பு 92 ரூபாய் என்ற அளவில் இருந்தது. பல்சர் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 60.36 கோடி ஆகும். மும்பை பங்குச்சந்தையின் ஆய்வின் அடிப்படையில் கடந்த ஒரு வார காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 6.58% உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 23.83% என உயர்ந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் 18.10 % வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த ஆறு மாதத்தில் 27.48%, கடந்த ஓராண்டு காலத்தில் பல்சர் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 4596% என்ற அளவிலும் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கானது கிட்டத்தட்ட 4000% லாபத்தை தந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 6100% மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 9000% என இந்த நிறுவனத்தின் மதிப்பு உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் லாபத்தை ஈட்டி தந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications