மும்பை : Punjab National Bank-க்கும் கட்டம் சரியில்லை. இந்த வங்கி ஜாதகப்படி, தற்போது சனி பகவானின் பார்வை வக்ரமாக இருக்கிறது போல. முன்பு நீரவ் மோடி பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது போல இப்போது, பூஷன் பவர் அண்ட் ஸ்டீல் (Bhushan Power & Steel) என்கிற நிறுவனம் சுமார் 3,800 கோடி ரூபாய்க்கு ஏகப்பட்ட முறைகேடுகள் செய்திருப்பதை கண்டு பிடித்திருக்கிறது.
Bhushan Power & Steel நிறுவனத்துக்கு வங்கி கொடுத்த கடன் பணத்தை முறையற்ற வழிகளில் செலவழித்தது, வங்கிகளில் கடன் வாங்குவதற்காக பொய்யான கணக்கு வழக்குகளை எழுதியது என பல குற்றங்களை அடுக்கி இருக்கிறது Punjab National Bank நிர்வாகம்.

வங்கி நடத்திய தணிக்கையின் அடிப்படையிலும், பூஷன் ஸ்டீல் நிறுவனத்தின் மீது சிபிஐ பதிவு செய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையிலும் 3,805.15 கோடி ரூபாய் பணத்தை மோசை செய்திருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கியிடம், Punjab National Bank முறையாக தெரியப்படுத்தி இருக்கிறார்களாம்.
தற்போது இந்த பூஷன் ஸ்டீல் நிறுவனத்தின் மீதான மோசடி வழக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் கடனை திருப்பி வசூலிக்கும் வேலையில் இருக்கிறதாம். விரைவில் ஒரு நல்ல தொகை பூஷன் ஸ்டீல் நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் என நம்பிக்கையோடு Punjab National Bank காத்திருக்கிறதாம்.
நம் Punjab National Bank இந்தியாவில் ஏமாந்ததோடு மட்டுமிலாமல், வெளிநாட்டிலும் அப்பாவியாக ஏமாந்திருக்கிறது. இந்திய Punjab National Bank கிளைகளில் 3,191 கோடி, துபாய் Punjab National Bank கிளை வழியாக சுமார் 350 கோடி ரூபாய், ஹாங்காங் கிளை வழியாக சுமார் 260 கோடி என பகுதி பகுதியாக ஏமாந்திருக்கிறது Punjab National Bank.
கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில் 81.80 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்தது அப்போது Punjab National Bank-ன் மொத்த சந்தை மதிப்பு (Market Capitalisation) 30,795 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இப்போது சுமார் 11% பங்கு விலை ஒரே நாளில் சரிந்து, 72 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இந்த விலை சரிவால் மட்டும் 3,041 கோடி ரூபாய் சந்தை மதிப்பு சரிந்திருக்கிறது.
ஆக ஒரு பக்கம் Punjab National Bank-ன் கடனாகக் கொடுத்த பணம் 3,800 கோடி காலி ஆகி இருக்கிறது. அதே நேரம் Punjab National Bank-ஐ நம்பி முதலீட்டு செய்த முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் பணம் 3,041 கோடி ரூபாயும் காணாமல் போய் இருக்கிறது. ஆக மொத்தம் 6,841 கோடி ரூபாய் பணம் இழப்பு.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications