மத்திய அரசு 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே நவீனமயமாக்கலுக்கு மோடி அரசு முக்கியத்துவம் அளித்து வருவதால் எதிர்வரும் பட்ஜெட்டிலும் இத்துறைக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும். அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான ஒதுக்கீடு ரூ.2.9 லட்சம் கோடி முதல் ரூ.3 லட்சம கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய ஆண்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.55 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது.
எதிர்வரும் பட்ஜெட்டில், ரயில்வே துறை வளர்ச்சிக்காக, சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது, தனியார் முதலீட்டை ஊக்குவிப்பு, புதிய ரயில் பாதைக்கு நிதி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. சரக்கு ரயில்களின் சராசரி வேகத்தை மணிக்கு 50 கி.மீ.ஆக அதிகரிக்க, நவீன 12,000 ஹெ.சி எலக்ட்ரிக் என்ஜின்களை வாங்குவது தொடர்பான அறிவிப்புகள் வெளியிட வேண்டும். சரக்கு போக்குவரத்தில் ரயில்வேயின் பங்கை 26-27 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக அதிகரிக்க கணிசமான சரக்கு பெட்டிகளுக்கு ஆர்டர் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் பட்ஜெட்டில் புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்காக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இநத நிதி, முந்தைய ஆண்டின் செலவினத்தை விட 50 சதவீதம் அதிகமாகும். அதிக நெரிசல் உள்ள பகுதிகள் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களுக்கிடையில் நெட்வொர்க்கை அதிகரிப்பதில் பயன்படுத்தும். 2030ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலைமையை இந்தியன் ரயில்வே இலக்காக கொண்டுள்ளதால், மின்மயமாக்கல் திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக பட்ஜெட்டில் நிதி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பொது-தனியார் கூட்டாண்மை மூலம் ரயில்வே செயல்பாடுகளில் குறிப்பாக அதிவேக ரயில் பாதைகள் மற்றும் நிலையங்களை நவீனமாயக்கல் போன்ற நடவடிக்கைகளில் தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த எதிர்பார்ப்புகளில் ஏதேனும் பட்ஜெட்டில் நிறைவேறினால் அது ரயில்வே துறைக்கு தேவையான ஊக்கத்தை அளிப்பதாக இருக்கும். எனவே பட்ஜெட்டில் ரயில்வேக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியானால் இத்துறையை சேர்ந்த நிறுவனபங்குகள் நல்ல ஏற்றத்தை சந்திக்கும். எனவே ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட், இந்திய ரயில்வே நிதி கார்ப்பரேஷன் லிமிடெட், ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட்,தித்கார் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட், பிஇஎம்எஸ் லிமிடெட்,இர்கான் இன்டர்நேஷனல் மற்றும் ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆகிய பங்குகள் மீது முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications