நாட்டின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்று இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (இண்டிகோ). 2006ல் இந்நிறுவனத்தை ராகுல் பாட்டியாவும், ராகேஷ் கங்வாலும் இணைந்து தொடங்கினர். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இண்டிகோ நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2022ல் இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவிலிருந்து இணை நிறுவனர்களில் ஒருவரான ராகேஷ் கங்வால் ராஜினாமா செய்தார்.
படிப்படியாக
அப்போது, இண்டிகோ நிறுவனத்தில் தனது பங்குகளை படிப்படியாக குறைக்க விரும்புவதாக கூறினார். இயக்குனர்கள் குழுவிலிருந்து விலகிய போதிலும், அவர் இண்டிகோவின் மிகப்பெரிய பங்குதாரர்களில் ஒருவராகவே இருந்தார். இந்த சூழ்நிலையில், ராகேஷ் கங்வால், இண்டிகோவில் சுமார் 3.4 சதவீத பங்குகளை ரூ.6,831 கோடிக்கு பிளாக் டீல்கள் மூலம் விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பரிவர்த்தனைக்கான அடிப்படை விலை ஒரு பங்குக்கு ரூ.5,175ஆக உள்ளது. இது பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் நிறைவடைந்த இண்டிகோ பங்கின் விலையான ரூ.5,418.30ஐ காட்டிலும் சுமார் 4.6 சதவீதம் குறைவாகும். முதலீட்டு வங்கி நிறுவனங்களான கோல்ட்மேன் சாக்ஸ் (இந்தியா) செக்யூரிட்டீஸ், மோர்கன் இந்தியா கம்பெனி மற்றும் ஜே பி மோர்கன் இந்தியா ஆகியவை இந்த பங்கு விற்பனையை நிர்வகிப்பவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.
நீண்ட கால திட்டம்
தற்போது ராகேஷ் கங்வால் இண்டிகோ பங்குகளை விற்பனை செய்வது, இண்டிகோவில் தனது பங்குகளை படிப்படியாக குறைப்பதற்கான அவரது நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது. ராகேஷ் கங்வால் இண்டிகோ பங்குகளை விற்க உள்ளதாக வெளியான தகவலையடுத்து, இண்டிகோ பங்கின் விலை சரிவு கண்டது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட் (இண்டிகோ) பங்கின் விலை சுமார் 3 சதவீதம் குறைந்து ரூ.5,256 வரை சரிந்தது.
2024 ஆகஸ்டில் கங்வால் மற்றும் அவரது குடும்ப அறக்கட்டளை 5.83 சதவீத பங்குகளை ரூ.10,500 கோடிக்கு விற்பனை செய்தனர். அதற்கு முன், 2024 மார்ச் மாதத்தில் கங்வால் 6 சதவீத பங்குகளை ரூ.6,786 கோடிக்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
பங்கு விலை
2024 அக்டோபர் 28ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இண்டிகோ நிறுவன பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.3,778.50க்கு சென்றது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த 19ம் தேதியன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.5,665.65ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்பங்கின் விலை புதிய உச்சத்தின் அருகில் உள்ள நிலையில். ராகேஷ் கங்வால் பங்குகளை விற்பனை செய்வது கவனிக்கத்தக்கது.
இண்டிகோ நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.68,904 கோடி ஈட்டியது. மேலும் கடந்த நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.8,167 கோடி ஈட்டியது. 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.22,110.70 கோடி ஈட்டியுள்ளது. அந்த காலாண்டில் இண்டிகோ நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,442 கோடி ஈட்டியுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.3 லட்சம் கோடி லாபம்.. மீண்டும் 25,000 புள்ளிகளை எட்டிய நிஃப்டி..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications