தொடர்ந்து 2வது வர்த்தக தினமாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. டிரம்ப் வரி விதிப்பை ஒத்தி வைத்தது, ரிசர்வ் வங்கியின் டிவிடெண்ட் அறிவிப்பு போன்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களால் இன்று பங்கு வர்த்தகம் களை கட்டியது. முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாளில் ரூ. 3 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.
டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூன் 1ம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டு இருந்தார். இநிலையில் அதனை ஜூலை 9ம் தேதி வரை ஒத்திவைத்துள்ளார். இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.2.69 லட்சம் கோடி வழங்குவதாக அறிவித்தது. இது நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு பெரும் உதவியாக இருக்கும்.

தொடர்ந்து 3வது வர்த்தக தினமாக நேற்று டாலர் இன்டெக்ஸ் சரிந்தது. டாலர் மதிப்பு தொடர்ந்து சரிந்தால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அன்னிய முதலீடு வரத்து அதிகரிக்கும். நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து குறைவாக இருப்பது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்ட சாதகமான நிலவரங்கள். அதேசமயம் இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சர்வதேச அளவில் வேகமாக வளர்ச்சி காணும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி நிலை முடிவுகள்
கடந்த மார்ச் காலாண்டில் பெரும்பாலான நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள் பங்குகளில் தொடர்ந்து முதலீட்டை அதிகரித்து வருவது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.445 லட்சம் கோடியாக உயர்ந்தது. இது நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் ரூ.442 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது.
சென்செக்ஸ்
மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,301 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,772 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 186 நிறுவன பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா, நெஸ்லே மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், எட்டர்னல் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.
வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 455.37 புள்ளிகள் உயர்ந்து 82,176.45 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 148 புள்ளிகள் அதிகரித்து 25,001.15ல் நிலை கொண்டது.
வாழ்க்கையை புரட்டி போட்ட விபத்து.. வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுத்த சோமேட்டோ ஊழியர்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!



Click it and Unblock the Notifications