மும்பை: ரயில்வே, வாகனங்கள் என பல துறைகளுக்கு தேவையான உலோக கேஸ்டிங்குகளை உற்பத்தி செய்யும் ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் நிறுவனம் , அமெரிக்க மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தன.
அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய மின்சார பயணிகள் வாகன உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு பவர் டிரெய்ன் பாகங்களை வழங்குவதாக ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த செய்தி வெளியானதை அடுத்து நிறுவனத்தின் பங்குகள் ஏப்ரல் 18ஆம் தேதி பங்குச்சந்தையில் சுமார் 4% உயர்ந்தன. பங்கு மதிப்பு ரூ.738.50இல் இருந்து ரூ.763.80 என வர்த்தகமானது.

மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் மின்சார வாகன துறையில் தாங்கள் கால் பதிக்க இருப்பதை இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக அமெரிக்காவை சேர்ந்த மின்சார பயணிகள் வாகன உற்பத்தியாளர் நிறுவனத்தோடு தங்கள் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் நிறுவனம் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உலோக வடிவமைத்தல் துறையில் உலக அளவில் சக்தி வாய்ந்த நிறுவனமாக இது விளங்குகிறது.
ஆட்டோமொபைல் ரயில்வே, விவசாய உபகரணங்கள், சுரங்க மற்றும் கட்டுமான பணிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம் போன்ற பல்வேறு துறைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.
40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த துறையில் அனுபவம் பெற்றுள்ள இந்த நிறுவனம் முதன்முறையாக மின்சார வாகன துறையில் கால் பதிக்க இருப்பதை தெரிவித்துள்ளது.
ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் நிறுவனம் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் அலுவலகம் ஜாம்செட்பூர், ஜார்க்கண்ட் ஆகிய ஊர்களிலும் அமெரிக்கா மெக்சிகோ மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் இருக்கிறது.
இயந்திர தயாரிப்பு துறையில் முன்னணி வகிக்கும் இந்த நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி திறன்1,87,100 மெட்ரிக் டன் ஆகும். அண்மையில் கூட வந்தே பாரத் ரயில் பெட்டிகளை வழங்குவதற்கான 270 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை இந்த நிறுவனம் பெற்றது.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications